கண்டியில் கல்விக் கண்காட்சி
(ஜே.எம்.ஹபீஸ்)
கண்டியில் மாபெறும் கல்விக் கண்காட்சி ஒன்றை நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 8,9 திகதிகளில் கண்டி சிட்டி சென்றர் கட்டிடத் தொகுதியில் இது இடம் பெறவுள்ளது.
மேற்படி கண்காட்சி தொடர்பாக கண்டியிலுள்ள இந்திய உதவித் தூதுவர் ஆறுமுகன் நட்ராஜன் தெரிவித்ததாவது,
இந்தியாவின் மிகப் பாரிய கல்விக்கண்காட்சியானது மலையக மக்களின் நன்மை கருதி இவ்வருடம கண்டியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மலையக சமுதாயமே கூடுதல் பயன் அடையவேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். புதிய கல்வித்துறைகள் கற்கை நெறிகள், அவற்றிற்கான பிரதி கூலங்கள் அனுகூலங்கள், எதிர்காலத் தேவைகள் போன்ற இன்னோரன்ன விடயங்கள் குறித்து அங்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சுமார் 15 பல்கலைக்கழகங்களின் பிரதி நிதிகள் சமுகமளித்தது பாட நெறிகள் தொடர்பான விளக்கங்களை வழங்க வுள்ளனர்.
வருடாவருடம் கொழும்பில் நடத்தும் இக்கண்காட்சியை கண்டியில் நடத்துவதன் பூரண பயனை பெருந்தோட்டப் பகுதிமாணவர்கள் அடைந்து கொள்வதற்காக அன்றைய தினம் கண்காட்சியைக் கண்டு பயன் அடையுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Post a Comment