Header Ads



ஹலால் சான்றிதழ் சர்ச்சைக்கு தீர்வு முழு நாட்டுக்கும் கிடைத்த வெற்றி - விமலரத்ன தேரர்


ஹலால் சான்றிதழ் சர்ச்சைக்கு தீர்வு முழு நாட்டுக்கும் கிடைத்த வெற்றி என விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்றுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

"ஹலால் சான்றிதழ் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு கிடைக்கப்பெற்ற இந்தத் தீர்மாமானது முழு நாட்டுக்கும் கிடைத்த வெற்றியாகும். பொது பல சேனவின் அபிப்பிராயங்கள் முழு பௌத்த தேரர்களின் அபிப்பிரயமுமல்ல. அனைத்து சமுகங்களிலும் அதீதிதீவிரவாதம் மற்றும் அடிப்படை வாதம் கொண்டவர்கள் காணப்படுவர்.

அதுபோன்றே இந்த பொது பல சேன அமைப்பினருமாகும். இதனால் இவர்கள் விடயத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அத்துடன் இந்த தீர்மானத்தினால் யாரும் வெற்றியடையவுமில்லை தோல்வியடையவுமில்லை. இது முழு நாட்டுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

இது ஒரு பௌத்த நாடு. எனினும் ஏனைய மதங்களையும் நாங்கள் மதிக்கின்றோம். அதேபோன்று ஏனைய மதத்தவர்களும் பௌத்தர்களை மதிக்க வேண்டும். ஹலால் முஸ்லிம்களின் உரிமையாகும். நாம் அதனை மதிக்கிறோம். அதேநேரம், இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையான மக்கள் நாம் ஏன் ஹலால் உண்ண வேண்டும் எனக் கேட்கிறார்கள். ஹலால் தொடர்பில் போதிய விளக்கம் எமக்கு வழங்கப்படவில்லை. 

இந்த விவகாரம் தொடர்பில் நாம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் பல தடவைகள் பேச்சு நடத்தினோம். உலமா சபையினர் எமது நண்பர்கள். நாம் தொடர்ந்தும் சிநேகபூர்வமான முறையில் விடயங்களைக் கையாளுவோம். இந்த தீர்மானத்தினை மேற்கொள்வதற்கு பின்னணி நிகழ்ச்சி நிரலிற்போ காரணங்களோ அல்லது எந்தவித அழுத்தங்களோ பிரயோகிக்கப்படவில்லை" என்றார்.

5 comments:

  1. முஸ்லிம்கள் நாங்கள் போராடவே இல்லை இதை வெற்றி என்கிறார்கள்

    ReplyDelete
  2. முஸ்லீம்கள் இனிமேல்தான் விழிப்பாக இருக்கவேன்டும் வேன்டுமென்றே உணவுப் பொருட்களில் ஹறாமான பொருட்களை சேர்த்து உற்பத்தி செய்யும் சதிகள் திட்டமிட்டு திரை மறைவில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. எனவே உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது எமது சமூத்தினால் நடாத்தப்படுகின்ற கொம்பனிகளின் பொருட்களைத் தேடி வாங்குவதை வழக்கப்படுத்திக் கொள்ளவேன்டும். அவ்வாறு பிஸ்கட் குடிபானங்கள் போன்ற உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் முஸ்லிம் நிறுவனங்களை இவ்வாறான வலைத் தளங்களில் தெரிந்தவர்கள் பட்டியல் படுத்தினால் அது எமது சமூகத்திற்கு பேருதவியாக இருப்பதோடு இனவாதிகளுக்கு அது பேரிடியாகவும் இருக்கும்.

    ReplyDelete
  3. We always respect to Ven, Bellanwila Wimalaratne Thero.

    ReplyDelete
  4. We accept your statement as a religious leader except that you quoted as “Sri lanka is Buddhist country, however we respect other communities “.

    Who drafted our constitution as it was given a “foremost” place to Buddhism while ensuring other religious rights AND the same time the constitution quoted other religious rights under fundamental rights. Is it practicable?

    In 1978, it created a room for easy manipulation of the constitution using two-third majority of parliament or referendum. Is it fair and reasonable since Buddhist community have more than two-third in terms of population?

    Is this procedure suitable for our country to sustain our development and to walk ahead in the 21st century associated with current era of globalization?

    We have amended our constitution about 20 times, but no one bring lead role to amend the heart of constitution. It is very evident that how United States of America has been monopolizing the whole world because of philosophy introduced by Mr.Abraham Lingon, which is to unite a country with multi cultural instead of making gap between communities.

    Our president stated after war that “in our country no more any races, only two, one is who loving our country and other not”. As we believe him, why we cannot implement practically? Therefore it should reflect in our constitution.

    We all, especially our Muslim community should sight with long vision, so as to convince the majority people to bring in all under one umbrella to live our country with lasting peace with harmony.

    Can we…..?

    ReplyDelete
  5. ஒரு அவசர வேன்டுகோள்:
    பெரும்பான்மை முஸ்லீம்களுகெதிரான விடயத்தில் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது முஸ்லீம்கள் நாட்டின் எந்தப்பகுதியில் வாழ்தாலும் ஹலால் பொறிக்கப்பட்ட உணவுவகைகளையே வாங்கி விற்கவேன்டும், பாவனைக்காகவும் வாங்கவேன்டும் என்பது தொடர்பாக நாம் கவனம் செலுத்துவோம்.
    குறிப்பாக, டின்களிலும் பக்கட்களிலும் அடைக்கப்பட்ட பால் உணவு மற்றும் ஜூஸ் வகைகள் போன்ற குடிபானங்கள், கொகொ கோலா வகைகள், பிஸ்கட் வகைகள், யோகட்கள்,கேக் வகைகள், முறுக்குவகை, இனிப்புவகையிலான தீன் பன்டங்கள், சம்பல் பக்கட்கள், பூட் சிட்டியிலுள்ள இறைச்சி வகைகள், சவுக்காரம், பேஸ்ட் வகைகள், தூரிகைகள்,சொக்லட் வகைகள், எண்ணெய் வகைகள், மசாலாதூள் வகைகள், சீஸ் பட்டர் வகைகள்,குழந்தை உணவு வகைகள், குழந்தைகள் வளர்தவர்களுக்கான அழகு சாதன பொருட்கள், கோன் ஃப்ளேஸ், பக்கட்டில் உள்ள வறுத்த பொரித்த தீன் பன்டங்கள் மற்றும் பொரித்த கிழங்கு வகைகள், மகீ சூப் கட்டிகள், உப்பு, டின்னில் அடைத்த மீன் வகைகள், ஐஸ் கிறீம் வகைகள், கோபி, தேயிலை தூள்கள் போன்ற எமது அன்றாட பாவனைப்பொருட்கள் தொடர்பாக நாம் மிகவும் கவனமாக கவனித்து கொள்வனவு செய்யவேன்டியிருக்கிறது.
    உள்ளூர் தயாரிப்பை பொறுத்தமட்டில் தயாரிப்பாளர் ஒரு முஸ்லீமாக இருப்பது பெயர் முகவரியுடன் பொறிக்கப்பட்டு இருக்கவேன்டும். சிறிய பெரிய தேனீர்க்கடைகள், ஹோட்டல்கல், உல்லாசவிடுதிகளைப்பொறுத்தமட்டில் குறிப்பாக பயனங்களின் போது மிகவும் அவதானம் தேவை. எதிரிகள் முஸ்லீம்களை வழிகேட்டில் செலுத்த அதிக பிரயத்தனம் செய்வதால் எமது இரத்தத்தில் ஹறாம் சேராது பாதுகாக்கவென்டியது ஒவ்வொரு முஸ்லீமுடைய பொறுப்பாகும். எனவே, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமது பிரதேச வியாபார ஸ்தாபனங்கள் தொடர்பாகவும் கொழும்பு மற்றும் எனய இடங்களிலிருந்து வரும் வினியோகஸ்தர்கள் தொடர்பாகவும் எச்சரிக்கையாக இருக்கவும். யார் எதை சொன்னாலும் எதை செய்தாலும் குர் ஆன், ஹதீதுகளின் அடிப்படையில் 1450 வருடங்களுக்கு மேலாக பேனி வரும் ஹலால் ஹறாம் விடயத்தில்பொறுப்பு எம்மையே சாரும்.

    ReplyDelete

Powered by Blogger.