'இஸ்லாத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததற்காக உயிருடனோ பிணமாகவோ தேவை'
(மா. ம)
அல் கொய்தா இணையதள இதழில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் 'இஸ்லாத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததற்காக உயிருடனோ பிணமாகவோ தேவை' என்ற தலைப்புடன் பலரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட இந்த இணைய தள இதழை வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள 'மிடில் ஈஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டியுட்' என்ற நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
அல் கொய்தாவின் இந்த அறிவிப்பில் 'ஆம் நம்மால் முடியும். ஒரு நாள், ஒரு தோட்டா இந்த நாத்திகர்களை ஒழிக்கும்' என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
2001 செப்டம்பர் 11-ல் அமெரிக்காவில் நடந்த தாக்குதல் நினைவு தினத்தில் குரானின் பிரதியை எரித்த பாஸ்டர் ஜான் டெர்ரி, அமெரிக்காவின் கேலி சித்திர ஓவியர் மொல்லி நோரிஸ், சோமாலிய நாட்டைச் சேர்ந்த பெண்ணியவாதியான அயான் ஹிர்சி அலி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இதில் படங்களுடன் இடம் பெற்றுள்ளன.
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இங்கிலாந்து எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் பெயரும் அதில் உள்ளது.
1989-ம் ஆண்டு இவர் எழுதிய 'தி சாதனிக் வெர்சஸ்' என்ற புத்தகம் வெளியானது. இதற்கு ஈரானின் தலைவர் மறைந்த அயோடோல கொமேனி எதிர்ப்பு தெரிவித்தார்.
ருஷ்டியை கொலை செய்ய ஈரானின் கொர்டாத் அறக்கட்டளை 2.5 மில்லியன் பவுண்டு பரிசுத்தொகை அறிவித்திருந்தது.
அல் கொய்தா இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பிரபலங்களின் கொலை பட்டியல் அறிவிப்பு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment