Header Ads



கற்பிட்டியில் 84 இலட்சம் பெறுமதியான வெளிநாட்ட கஞ்சா பிடிபட்டது (படங்கள்)




(அபூ முஸ்னா + அபூ நாதில்)

கல்பிட்டி பொலிஸ் நிலைய விஷேட நடவடிக்கைப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றின் போது 48 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு கல்பிட்டி நகரில் 2 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டதையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையினையடுத்து கல்பிட்டி லாம்புத்தீவு எனும் தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 46 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்தனர்.

கல்பிட்டி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இந்நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொன்றும் இரண்டு கிலோ எடை கொண்ட 24 பொதிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றின் பெறுமதி சுமார் 84 இலட்சத்திற்கும் அதிகம் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இந்தளவு பாரிய தொகை கேரள கஞ்சா புத்தளம் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டது இதுவே முதற் தடவை எனவும் பொலிசார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவரையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.