Header Ads



அநியாயத்தினை நோக்கிய கச்சிதமான முன்னெடுப்பு..!



(Ibnu Nayeem)

இன்று ஒரு கட்டுக் கடங்காத தீவிரவாத இயக்கமாக உருவெடுத்திருக்கும்   "பொது பல சேனா" பற்றிய சில முக்கிய விடயங்களை அலசலாம் என நினைக்கிறேன்.  காரணம் பாதுகாப்பு செயலாளரினால் திறந்து வைக்கப்பட இருக்கும் "தலைமைத்துவ நிறுவகம் " பற்றிய செய்தி வந்தது. குறிப்பாக யூதர்களின் மூளையில் இயங்கும் இந்தக் கோமாளிக் கூட்டம் (BBS) தங்கள் பிரச்சாரத்தின் பால் மக்களை திசை திருப்ப பல அடிப்படை வேலைத்திட்டங்களை செய்துள்ளனர். அவற்றில் சிலதை  இங்கு குறிப்பிடுவது நம்மை உசார் செய்ய உதவும் என நினைக்கிறேன். 
 1.  மீடியாக்களை தங்கள் வேலைத்திட்டங்களுக்கு ஏற்றால்ப்  போல கச்சிதமாய்ப் பயன்படுத்தியது. 

2.  சிங்கள சிறார்களுக்கு ஞாயற்றுக் கிழமைகளில் நடக்கும் "தஹம் பசல" களில் தங்களது பிரச்சாரத்துக்கு ஏற்ற நச்சுக் கருத்துக்களை   பதிப்பது. இவ்விடயம் சிங்கள மக்களிடையே அதிருப்திய ஏற்படுத்தினாலும் வேலை நடக்கிறது. 

3.  அரசாங்கத்தை பகைக்காது, அவர்களை நெருங்குவதற்கு ஏற்றால் போல எதிர்க் கட்சியை பயன்படுத்தியது. 

4.  இளம் இரத்தம் ஓடுகின்ற 16,17 வயது மாணவர்களுக்கு   நச்சுக் கருத்துக்களை புகுத்தி சமூக வலையமைப்புகளில் அவர்கள் மூலமாக இலங்கை முழுவதும் இளஇரத்தங்களில் இனத் துவேஷத்தை புகுத்தல். 

5.  எதிர்த் தரப்பு ஆணித்தனமாய் பேசினாலும் தாங்கள் கூறும் பொய்யில் மிக உறுதியாகவும், ஆதாரத்தைக் காட்டாது ஆதாரம் இருப்பதாய் தொடர்ந்து பொய்யுரைத்தல். உதாரணமாக "பலவந்த ஹலால்" கோஷம் அவர்கள் முன் வைத்தது. 

 6.  இஸ்லாமிய சமுதாயத்தில் அவர்கள் உட்பிரிவுகள், சட்டங்கள், சமுதாய அமைப்பு, மக்கள் பழக்க வழக்கங்கள் இன்ன பிற விடயங்களை அறிந்து கொள்ள சமுதாயத்தில் காட்டிக் கொடுக்கும் கூட்டத்தை சரியாக இனம் கண்டு அவர்கள் உதவியைப் பெற்றமை.

7. அரசாங்க நிறுவனங்களில் வேலை இல்லாது அரட்டை அடிக்கும், வீண் பேச்சுக்களில் காலத்தை வீணாக்கும் கூட்டத்தை தமது பிரச்சாரத்தைக் கொண்டு போகும் ஊடகமாக பயன்படுத்தல். 

8. இந்த வரிசையில் புதிய concept  தான் தலைமைத்துவ நிறுவகம். இதன் மூலம் தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரில் இளம் இரத்தங்களை தமது வேலைகளுக்கு ஏற்றால்ப் போல தயார் படுத்திக்கொள்ள முனையக் கூடும்.

இப்படி யூதர்களின் உதவி கொண்டு மிகக் கச்சிதமாய் இஸ்லாமிய சமூகத்தை கருவறுக்கும் நோக்கோடு இவர்கள் திரண்டுள்ளனர். இந்த நேரத்தில் நமது காய் நகர்த்தல்கள் எதுவும் நமது சமூகத்தை இன்னும் ஆபத்தில் மாட்டும் விதமாய் அமையவும் கூடாது. அதேவேளை "பயம்" என்ற ஒன்று நம்மை ஆட்டிப் படைத்தாலும் நமது கதி அதோ கதி தான். நாமாக வம்புக்கு போகத் தேவையில்லை.ஆனால் பிரச்சினையை எதிர்கொள்ள சில அணுகு முறைகளை சொல்லலாமென நினைக்கிறேன். 

1.  நமக்கு சார்பாக உள்ள பெரும்பான்மை சகோதரர்களை நமது விமர்சனங்கள் காயப்படுத்தாது பார்த்துக் கொள்ளல். 

2. அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்லாத்தைப் பற்றி, அதன் சட்டங்களை பற்றி விளங்கப் படுத்தல். அதே நேரம் நாம் நன் மக்களாக வாழல்.

3. எல்லை மீறும் போது, நமது பள்ளிவாயல்கள் தாக்கப் படும் போது, நம் மக்கள் பாதிக்கப் படும் போது தைரியமாக முன்வந்து அவர்களை முன்னேற விடாது தடுத்தல். இதன்போது நாம் எல்லை மீறாது இருத்தல் அவசியம். 

4. எதிர் காலத்தையும் சேர்த்த திட்டம் என்பதால் நமது இளம் சிறார்களை இஸ்லாம் கூறும்  நற்பன்புகளுடன் வளர்த்தெடுத்தல். இதற்கெற்றால் போல் நமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளல். இசை, பாட்டு, படம், கூத்து, கும்மாளம் என்று சமூகத்துக்கு வீணானதாக  நமது வாரிசுகளை வளர்க்காது, நல்ல ஒரு இஸ்லாமியனாய் வளர்த்தெடுத்தல். அதற்காகவாவது நமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளல். 

இவர்களின் திட்டங்களைப் பார்த்தால் இவை இவர்கள் சொந்த அறிவு  கொண்டு தீட்டப்  பட்டதாய் தெரியவில்லை. உலக அரங்கில் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களுக்கு ஒப்பாய் உள்ளது. இதை யூதர்கள் துணை கொண்டே செய்திருக்க வேண்டும். 

சகோதரர்களே!! நாம் இறைவனுக்கு அதிகம் அஞ்சுபவர்களாகவும், அவனையே நாடி நிற்கும் சமுதாயமாகவும் உலக ஆசைகளை விட்டெறிந்தவர்களாகவும், மரண பயத்தை தூக்கி வீசியவர்களாகவும் மாறினால் இறைவனின் உதவி வெகு தொலைவில் இல்லை. இவை எல்லாம் சாம்பலாலான மலை போன்றது. அல்லாஹ் நாடினால் காற்றடித்தால் பறந்து போவது போல நம்மை விட்டு விலகிவிடும்.

4 comments:

  1. This is an international level plan dear Nayeem. And this is a different type disaster to Muslims community. We tackle it very carefully. According some article I read We must establish Soora very soon in each Village to face these problems.

    ReplyDelete
  2. Why government let antagonism against muslims and islam in sri lanka by jewish. In return what the goverment get from them. Support against the UN resolution.?..? Then who is yhe master planer?


    Note: if my statement too sentiment please do not publish.thanks.

    ReplyDelete
  3. Good Article Bro! Keep Posting...

    ReplyDelete

Powered by Blogger.