ஈரான் ஜனாதிபதி அஹ்மதி நெஜாத் சிக்கலில் மாட்டினார் (படம்)
மறைந்த வெனிசூலா நாட்டின் தலைவர் ஹூகோ சாவேஸின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பொருட்டு அங்கு சென்றிருந்த ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மடின் நிஜாத் அவரின் தாயாரை கட்டித் தழுவியமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் பழமைவாதக் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஹூகோ சாவேஸின் தாயாரான எலினா ப்ரயஸ் டீ சாவிஸை கட்டித் தழுவி ஆறுதல் கூறுவது போன்ற படங்கள் சில ஊடகங்களில் வெளியான பின்னரே இச்சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அவரது நடவடிக்கை இஸ்லாமுக்கு முரணானதென பழமைவாத தரப்பினர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
அஹ்மடின்ன் நிஜாத் தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும், எந்தவொரு தருணத்திலும் உறவினரல்லாத பெண்ணெருவருடன் இவ்வாறு நடந்துகொள்வது முறையல்லவெனவும் ஈரானைச் சேர்ந்த மதத்தலைவர்களில் ஒருவரான மொஹமட் தாகி- ராபர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இஸ்லாமிய நாடான ஈரானின் தலைவர் எனவும் மொஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.

he is not hugging the women,u can see his hand that he try to refuse that action. only man in the world never shake hand with women
ReplyDelete