லிபியாவில் மது அருந்திய 52 பேர் மரணம், 400 பேர் பாதிப்பு
லிபியாவில் மதுபானம் விற்பதும், அருந்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு கள்ளச்சந்தையில் போகா எனப்படும் வீட்டில் தயாரிக்கப்படும் சட்டவிரோத மதுபானம் தாராளமாக கிடைக்கிறது. அப்படி வீட்டில் திருட்டுத்தனமாக தயாரித்து விற்பனை செய்யப்பட்ட மெத்தனாலை குடித்ததில் திரிபோலியில் 51 பேர் உயிரிழந்தனர்.
மேலும், கிட்னி பாதிக்கப்பட்ட நிலையில் சுமார் 400 பேர் தலைநகர் திரிபோலி மற்றும் டுனிசியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தலைநகரில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணம், மெத்தனால் விஷம் இருந்த போதைப்பொருளை அருந்தியதே காரணம் என்று சொல்லப்படுகிறது.
லிபியாவில் தயாரிக்கப்படும் இந்த போகா மதுபானங்களுக்கு பக்கத்து நாடுகளான டுனிசியா, அல்ஜீரியா, மால்டாவிற்கு அமோக வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 1 1

Post a Comment