'பெரும்பான்மை இனம் இட்டதுதான் சட்டம் என்ற கொள்கை உலகில் எங்கும் கிடையாது'
(ஜே.எம்.ஹபீஸ்)
பெரும்பான்மை இனம் இட்டதுதான் சட்டம் என்ற கொள்கை உலகில் எங்கும் கிடையாது. இன்று மதத்தைப் பாதுகாக்க மட்டுமே பௌத்த மதக் கோட்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஒழுக்க விழுமியங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்த வேண்டும். என்று பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அமரகீர்த்தி லியனகே தெரிவித்தார்.
மறைந்த கலைஞரும் அரசியல் வாதியுமான விஜய குமாரதுங்கவின் 25 வது நினைவு தின வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கண்டியில் இடம் பெற்ற இவ்வைபவத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் சகல உரிமைகளும் உண்டு. அவரவர் தேவைக்கேற்ப அவற்றை அனுபவிக்கும் உரிமை குடிமக்களுக்கு உண்டு. இன்று பெரும்பான்மை தேசிய கலச்சார வாதம் மேலோங்கிச் செல்கிறது.
உலகில் எந்த ஒரு இனமோ குழுவோ எமது கலாச்சாரம்தான் உயர்ந்தது. அது எமக்கே உரித்ததான கலாச்சாரம் என தூக்கிப் பிடிக்க முடியாது. எல்லாம் கலப்புக் கலாச்சாரமாகவே உள்ளன. ஒன்றுடன் ஒன்று இணைந்து கூட்டுச் கலாச்சாரமே உள்ளது. உதாரணமாக சிங்கள உணவு முறை என நாம் பெருமையாகக் கூறிக் கொண்டாலும் அதில் இந்தியா, மலேசியா, தாய்லந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் கலப்பு முறை ஒன்று காணப்படுகிறது.
ஒரு நாடு சிறப்படைவது பல்லின சமூக அமைப்பு மற்றும் பல்லின காலச்சாரப்பாரம்பரயங்களினாலாகும்.
நாம் பிரதான நகரம் ஒன்றில் ஒரு கிலோமீட்டர் பயணம் செய்தால் எத்தனை வேறுபட்ட கலாச்சார வேறு பாடுகளைக் காண்கிறோம். இதுவே எமது நாட்டின் அழகாகும்.இது பல்லின அடிப்படையில் வந்ததே தவிர பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் உரித்தாகாது.
உலகில் எந்த ஒரு இனமும் பூரணமான தனிக்கலாச்சாரத்தைக் கொண்டிருக்கவில்லை. எல்லா இனங்களுக்மிடையே கொடுக்கல் வாங்கள் நிகழ்ந்தது. இதனை கௌதம புத்தர் அழகாக விளக்குகிறார். அரிசி கிடைப்பது யாரால் என்று பொதுமககளிடம் கேட்கப்பட்ட போது குறிப்பிட்ட ஒரு இனத்தையே சுட்டிக்காட்டினர். ஆனால் புத்தர் அப்படி அல்ல வென்றும் வயல் உழுவதற்கான உபகரணங்களை ஒரு பிரிவினர் வழங்குகின்றனர். மாடுகளை இன்னொறு பிரிவினர் வழங்குகின்றனர். அதற்கான பசளை போன்றவை இன்னொரு பிரிவு வழங்குகிறது.
அதனை அரிசியாக மாற்ற பிரதொரு குழு முற்படுகிறது. இன்னொரு குழு அதனை இடத்திற்கு இடம் எடுத்துச் செல்கிறது. பிரதொரு இனம் அதனை விற்பனை செய்கிறது. இப்படி பல்வேறு குழுக்கள் இணைந்தே அவற்றை உற்பத்தி செய்வதாக கௌதம புத்தர் விளக்கமளித்தார். எனவே கூட்டுக் கலாச்சாரம் தவர்க்க முடியாது. அவரவர் கலாச்சாரப்படி அவரவர் வாழும் உரிமையுண்டு. குறிப்பிட்ட பெரும்பான்மை இனம் கூறும் விதத்தில்தான் மற்றவர்களும வாழவேண்டு என்று எதிர்பார்க்க முடியாது என்றார்.



உண்மையை பேசுகிற நல்லெண்னம் படைத்தவர்களுமுண்டு
ReplyDeleteபுகழ் அணைத்தும் அல்லாஹ்வுக்கே
பௌத்த மக்கள் எல்லோரும் இனவாதம் பேசுபவர்கள் அல்ல என்பதற்கு நல்ல உதாரணம் பெரும்பான்மையான பௌத்தர்களின் நிலைப்பாடு இதுதான் ஒரு சிலர் இனப்பிரச்சினைக்கு துாபமிடுகின்றனர். அல்லாஹ் பார்த்துக் கொள்வான் ”ஹஸ்பியல்லாஹி வனிஹ்மல் வகீல்”
ReplyDelete