பெஷன்பக் மீதான தாக்குதலும், அதிர்ச்சிகரமான பின்னணி தகவல்களும்..!
முஸ்லிம் வர்த்தகருக்கு சொநதமான பொரலஸ்கமுவ, பெபிலியானவில் அமைந்துள்ள பெஷன்பக் வர்த்தக நிலையம் மீது குண்டர்கள் வியாழக்கிழமை தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். பெஷன்பக் வர்த்தக நிலையத்திற்கு அருகிலுள்ள பௌத்த விகாரையிலிருந்து தீடீரென திரண்டு வந்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதல் நடைபெற்ற பிறகு இதுதொடர்பில் அரசாங்க உயர்மட்டத்தினர் வெளிப்படுத்திய கருத்துக்கள் முஸ்லிம்களை அதிர்ச்சியடையச் செய்திருப்பதுடன், கவலைகொள்ள செய்துமுள்ளது. உண்மையை அறியாது வதந்திககளையும், குண்டர்களின் நியாயங்களையும் மாத்திரம் செவிமடுத்து அரசாங்க உயர்தரப்பினரிடமிருந்து வரும் ஒருபக்க கருத்துக்கள் பற்றியும் முஸ்லிம்கள் தமது அதிருப்தியை வெளியிட்டிருப்தாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.
பெஷன்பக் மீதான குண்டர்களின் தாக்குதலுக்கு 15 வயது பௌத்த சகோதரி ஒருவரை முஸ்லிம் வாலிபர் ஒருவர் பலாத்கார பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதே காரணமென அரசாங்க உயர்மட்டம் நம்புகிறதாம். இது மிக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிபடுத்தப்பட்டது. இவ்வாறான வதந்தியே திட்டமிட்டு அப்பாவி சிங்கள மக்களிடையே பரவவிடப்பட்டுள்ளது. (எனினும் இந்த வதந்தி முற்றிலும் பொய்யானது)
எனினும் முஸ்லிம்கள் சார்பில் இந்த வதந்தி முற்றிலும் பொய் சம்பவமென அரசாங்க உயர்மட்டத்தினருக்கு எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
மேலும் வியாழக்கிழமை நள்ளிரவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸ, குண்டர்களின் தாக்குதலுக்குள்ளான பெஷன்பக் வர்த்தக நிலையத்தை பார்வையிட வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தபோதும் அவர் அங்கு செல்லவில்லை. மாறாக பெஷன்பக்கை தாக்குவதற்கு குண்டர்கள் எந்த விகாரையிலிருந்து திரண்டு சென்றார்களே, அந்த விகாரைக்கு கோட்டபய ராஜபக்ஸ அதிரடி விஜயமொன்றை நள்ளிரவு வேளையில் மேற்கொண்டு, அந்த விகாரையில் சில மணிநேரம் இருந்துள்ளார்.
அதேநேரம் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குண்டர்களின் தாக்குதலுக்குள்ளான பெஷன்பக் நள்ளிரவு வேளை சென்று இவ்வாறான சம்பவங்கள் எதிர்வரும் காலங்களில் நடைபெறாமலிருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், பாதுகாப்பு பலப்படுத்தப்படுமெனவும் வாக்குறுதி வழங்கியதாகவும் அறியவருகிறது.
அதேவேளை பெஷன்பக் நிறுவனம் அமைந்துள்ள பகுதிக்கு கொஞ்சம் தள்ளி, சிங்கள சகோதரி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனை பிரதேச பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது.
அதேவேளை பெஷன்பக் நிறுவனம் அமைந்துள்ள பகுதிக்கு கொஞ்சம் தள்ளி, சிங்கள சகோதரி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனை பிரதேச பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது.

make your news clear-which fashin bug-or which city or which distric
ReplyDeleteபர்மா பாணியில் இங்கும் முயற்சிப்பது போல் தெரிகிறது, இந்நேரத்தில் முஸ்லிம்களாகிய நாம் மிகவும் அவதானத்தோடும், பொறுமையுடனும் செயட்படல் வேண்டும். அவசரப்பட்டால் அவர்களுக்கு சாதகமாக அமைந்துவிடும் ''அல்லாஹ் என்றும் எம்மை சூட்சிகளில் நின்றும் காப்பானாக'' ஆமீன் !
ReplyDeleteஇதுதான் இன்றைய உலகம்! வன்முறையின் பிறப்பிடம் எங்கே இருக்குறது? முஸ்லிம்கள் அமைதி காப்பதும் இறைவனை பிரர்த்திப்பதுமே ஒரே வழி முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் திரு ரஞ்சன் விஜயவர்டென அவர்கள் அமைச்சர் m h m அஷ்ரப் அவர்கள் முஸ்லிம்களுக்கு புலிப்பயங்கரவதிகளிடம் இருந்து பாதுகாப்பு தாருங்கள் என்று கேட்டபோது ஏன் இங்கு பாராளுமன்றத்தில் கேட்கிறீர் உமது அல்லாவிடம் கேளுங்கள் என்று ஏளனம் செய்தார். நாம் அதை உண்மையாக ஏற்று அல்லாஹ்வை வேண்டினோம் இன்று புலிகள் எங்கே இதைப்போல் இன்னும் அவனையே வேண்டுவோம் மிக விரைவில் நிலைமையை சீர் செய்வான்
ReplyDeleteWhere ever happens any problem now reason muslim fundem..ts. This is the view of bbs.t nadu attak on monks too the same.WYY? One thing is clear that some body want to create terrorism inthis country again.we will wait pationtly
ReplyDeleteஎன்னங்க கொடும இது...!
ReplyDeleteஅப்படித்தான் இருந்தாலும், அதைக் கேட்பதட்கு ஒரு அரசாங்கம் போலீஸ் இருக்கில்ல...!
காடயர்களிடமா இப்போது நீதி கொடுக்கப்பட்டுள்ளது...!
இறைவா நீதான் எங்களுக்கு உதவி புரிவாய்...!