அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு மத்தியில் பாகிஸ்தான், ஈரான் எரிவாயு திட்டம் ஆரம்பம்
ஈரான் நாட்டிலிருந்து 7.5 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தை பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும், ஈரான் அதிபர் அஹமதிநிஜாத்தும் இன்று தொடங்கிவைத்தனர். இத்திட்டத்தை கைவிடவேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க செய்தித் தொடர்பாளார் விக்டோரியா நூலாந்து கூறியதாவது:-
ஈரான் பாகிஸ்தான் எரிவாயு குழாய் இணைப்பு திட்டம் குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறோம். இது குறித்து கவலைகளையும் நாங்கள் பாகிஸ்தானிடம் விளக்கியிருக்கிறோம். பாகிஸ்தானுக்கு தேவைப்படும் மாற்று ஆற்றல் திட்டங்கள் அளிப்பது குறித்து, பாகிஸ்தானுக்கு உறுதியளித்துள்ளோம்.
இதற்கு முன்பு 10, 15 முறை இதுபோன்று திட்டங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பார்க்கவேண்டும். மீறி இந்த ஒப்பந்தம் இந்த நேரத்தில் நிறைவேற்றப்படுமானால், பாகிஸ்தான் தவறான வழிகளில் செல்ல அறிவுறுத்தப்படும். எனவே பாகிஸ்தான் பொருளாதாரத்தடைகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.
ஈரான்-பாகிஸ்தான் இடையேயான இந்த திட்டத்தை தடுப்பதற்கு அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் கிடையாது என்று ஈரான் அதிபர் அஹமதிநிஜாத் கூறியுள்ளார்.

ஸபாஷ்!!! அப்படிப்போடு,,,.
ReplyDeleteHello America, Why you put your nose in to others matter? Mind your business.
ReplyDelete