'கண்ணாடிக்குளத்துக் கவிதை' நூல் வெளியீட்டு விழா
(எஸ்.அன்சப் இலாஹி)
அறிவிப்பாளரும், ஆசிரியருமான ஜே.வஹாப்தீன் எழுதிய 'கண்ணாடிக்குளத்துக் கவிதை' நூல் வெளியீட்டு விழா நேற்று (10.03.2013) ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலய மண்டபத்தில் இலங்கை வானொலி பிறை எப்.எம். கட்டுப்பாட்டாளர் பசீர் அப்துல் கையூம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது முதன்மை அதிதிகளாக கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுடீன், ஏ.எல்.எம்.நசீர் ஆகியோர் முதற் பிரதி மற்றும் சிறப்பு பிரதிகளை வழங்குவதனையும், சிரேஷ்ட ஒலிபரப்பாளரும், பிறை எப்.எம். சந்தைப்படுத்தல் முகாமையாளரும், கவிஞருமான எஸ்.ரபீக், சிரேஷ்ட ஒலிபரப்பாளரும், பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளருமான பசீர் அப்துல் கையூமுக்கு சிறப்புப் பிரதி வழங்குவதனையும் கலந்து கொண்டவர்களின் ஒரு பகுதியினர்களையும் படங்களில் காணலாம்.



Post a Comment