தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவுக்கு ஓர் மடல்
இலங்கை முஸ்லிம்களின் கல்வியூட்டிய தந்தையர்களாக முந்நாள் அரப்பணச்சிந்தனையுள்ள தமிழ் ஆசிரியர்களே திகழ்ந்துள்ளனர். அது மட்டுமல்ல முஸ்லிம் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுவதற்கும் தந்தை செல்வா, அமிர்தலிங்கம் ஐயா, சிவசிதம்பரம் ஐயா, ஆனந்தசங்கரி ஐயா அவர்கள் காரணகர்த்தாக்களாக இருந்துள்ளனர்.
மர்ஹும் எம்.எச். எம்.அஸ்ரப், மசூர் மௌலானா, இல்யாஸ், இமாம் போன்றவர்கள் அனைவரும் தமிழர் விடுதலைக்கூட்டணி பாசறையில் வளர்ந்தவர்களே. கடந்தகாலங்களில் முஸ்லிம் மக்களின் வாக்குகளும் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கே அளிக்கப்பட்டு வந்துள்ளன.இதுதான் வரலாறு.
தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே அரசியல் வண்டியில் பயணிக்கமுடியாத ஒரு களநிலை ஏற்பட்டது. இதனால் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றன. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை உருவாக்கிய மாபெரும் தலைவர் எம்.எச்எம்.அஸ்ரப் அவர்கள் அன்று கூறினார் 'இக்கட்சி,இயக்கம் முஸ்லிம்களின் உரிமைகளைப்பாதுகாப்பதற்கான ஒருநிறுவனமேயன்றி அபிவிருத்திவேலைகளைச் செய்யும் ஒரு அமைப்பல்ல; என்று.
அமைச்சுப்பதவிகளுக்காக முஸ்லிம் காங்கிரஸ் எப்போது சோரம்போனதோ அன்றிலிருந்து முஸலிம்களின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டுக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.இன்று முஸ்லிம் காங்கிரசின் நிலை கண்களைவிற்று ஓவியம் வாங்கியதுபோல உள்ளது.
முஸ்லிம் தலைவர்களால் போராடிப்பெற்றுக்கொடுக்கப்பட்ட உரிமைகள் எல்லாம் நாம் விழிப்புடன் இருக்கும்போதே பறிபோகின்றன.இதைத்தடுக்கமுடியாத கையறுநிலையிலும்,ஒரு ஆர்ப்பாட்டம் நடாத்தமுடியாத நிலையிலும் முஸ்லிம் சமுகம் உள்ளது.வியாபாரத்தில் முஸ்லிம்கள் அதிக ஈடுபாடுகொண்டதன் காரணமாக நகரங்களில் அதிக முஸ்லிம் கடைகள் உள்ளன. புராதன இலங்கை மக்களுக்கும் முதன்முதலில் வியாபாரத்தைக் காட்டிக்கொடுத்தவர்கள் முஸ்லிம்களேயாவர். முஸ்லிம்களின் சமயத்தேவைகளுக்காக நகரங்களில் பள்ளிவாயல்களையும் அமைத்துக்கொண்டார்கள்.இவற்றை இன்று தோன்றியுள்ள அடிப்படைவாத சிந்தனை கொண்ட பொதுபலசேன முஸ்லிம்களின் கடைகளையும்,பள்ளிவாயல்களையும் அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது.
அதுமட்டுமன்றி அல்லாஹ்வின் பெயரை முஸ்லிம்களால் வெறுக்கப்பட்ட மிருகமான பன்றியின் உருவத்தில் எழுதி அவமதித்த நிகழ்வும் முஸ்லிம்களின் நெஞ்சங்களில் மாறாத காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
 பள்ளிகளில் பாங்கு சொல்லும் உரிமை
 குர்பான் கொடுக்கும் உரிமை
 மாட்டிறைச்சி சாப்பிடும் உரிமை
 ஹலால் உண்ணும் உரிமை
 நோன்புகால உரிமைகள்
 பெண்கள் சமைய அடிப்படையிலான ஆடைகள் அணியும் உரிமை
 பிள்ளைகள் பெறுவதற்கான உரிமைகள்
 தராவீஹ் தொழுவதற்கான உரிமைகள்
 காணிகள் விற்பதற்கான வாங்குவதற்கான உரிமை
காலாகாலம் ஆட்சிக்கு வந்த நாட்டின் அரசியல் தலைவர்களால் எவ்விதப்பிரச்சினையுமின்றி வழங்கப்பட்டுவந்த இவ்வுரிமைகள் எல்லாம் இன்று தடுக்கப்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது. இதை ஒரு சிறு குழு செய்கிறது. சிறுசம்பவம் என்று விட்டுவிடமுடியாது ஒரு சிறு நெருப்பு எப்படி ஒரு பெரும் காட்டையே அழித்துவிடுகிறதோ அப்படி நாட்டையே எரித்துவிடும்.
தாங்கள் அண்மையில் பாராளுமன்றில் முஸ்லிம்களுக்கு ஒரு அநியாயம் நடைபெறவிடமாட்டோம் என்று கூறியதுடன் மட்டுமல்லாது முஸ்லிம்கட்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் கண்டித்திருந்தீர்கள்.இதற்காக இலங்கை முஸ்லிம்கள் சார்பில் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.உங்களின் அறிக்கையும், மாவை சோனாதிராஜா, போன்றோரின் அறிக்கையும் முஸ்லிம்கட்கு நம்பிக்கையை ஊட்டுகின்றன.
ஆனால் உங்களின் கட்டமைப்பில் உள்ள வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைகள் தமிழ், முஸ்லிம் உறவை பாதிப்பதாக உள்ளது. ஆகவே நீங்கள் இவர்களுக்கு ஆலோசனையை வழங்குவதுடன், வட புல முஸ்லி;ம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் முன்னின்று உழைக்க வேண்டும்.
தமிழ் முஸ்லிம் ஒற்றுமை இன்று மிகவும் வேண்டப்படுகிறது.ஒரு சிறுபான்மைக்கு; ஆதரவாக இன்னுமொரு சிறுபான்மை குரல்கொடுக்கும் நிலையை ஏற்படுத்தவேண்டும்.தமிழ் அரசியல் கட்சிகளும் ,முஸ்லிம் அரசியல் கட்சிகளும் காலம் தாழ்த்தாமல் ஒரு புரிந்துணர்வுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கேட்டால் அல்லாஹ்விடம் கேளுங்கள்.
ReplyDeleteஉதவி தேடினால் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்!!!!!!!!!
Dear Mr. Mahendran Gowrishankar why this kolaveRy please be passion. you should not get tension, it will bring you to a critical place like where we are right now. this is main reason our people being always looser. don't reply or post such a silly comments
ReplyDeleteDear Mahendran,
ReplyDeleteTamils were killed by Muslims?????
Think dear Mahendran. I think you are below 18 years old. Before you were born there were a lot murders done in Sri Lanka. Study them in the history.
I regret for your weakness.