பிரதமர் ஜயரத்னக்கு கொரியாவின் பல்கலைக்கழகத்தால் கலாநிதிப்பட்டம் (படம்)
(ஜே.எம்.ஹபீஸ்)
பிரதமர் டி.எம். ஜயரத்ன அவர்களுக்கு கொரியாவின் சூ சேன் டு நகரிலுள்ள சன்மூன் பல்கலைக்கழகத்தால் கலாநிதிப்பட்டம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மேற்கொண்ட அரசியல், சமூக நடவடிக்கைகள் மற்றும் அவர் துல்லியமாகச் சமாளித்த பல்வேறு நெருக்கடிகள் போன்ற வற்றை கௌவித்தே இக் கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பேராசிரியர் சன்ஜோ ஹூவாக் மேற்படி பட்டமளிப்பு வைபவத்தில் இதனை வழங்கினார். இவ்வைபவத்தில்கொரியாவைச் சேர்ந்த பேராசிரியர்க்ள், மற்றும் பல்வேறு கலாநிதிகள் பட்டதாரிகள் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment