முஸ்லிம்களையும், உலமா சபையையும் பிரித்தாள சதியா..?
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் கரைபடிந்த ஒரு நாளாக இன்றைய நாளைக் (11) கருதலாம். இலங்கை வாழ் முஸ்லிம்களின் கல்வி, கலாசாரம், பொருளாதாரம் என்பவற்றை காழ்ப்புணர்ச்சிகளின் காரணமாக அழித்துவிட்டு, அவர்களின் வரலாறுகளை இல்லாமல் செய்து அடிமைகளாக, எடுப்பார் கைப்பிள்ளைகாளக நடத்துவதற்கான நீண்ட காலத்திட்டத்தின் முதற்படிக்கு வழிவிட்டதாகவே இன்று (11.03.2013) உலமா சபையினால் மேற்கொள்ளப்பட்ட அவசர முடிவைக் கருத வேண்டியுள்ளது.
ஹலால் தொடர்பாக இறுதி முடிவெடுப்பதற்கு அமைச்சவை உப குழு நியமிக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டமை இலங்கை வாழ் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஹலால் கைவிடப்பட்டது தொடர்பில் பேரினவாத சக்திகளுக்கு கூஜாதூக்கும் இணையத்தளங்களும், சமூக வலைப்பின்னல்கள் ஊடாக பரிமாறப்படும் கருத்துக்களும் முஸ்லிம்களின் மனதை பெரும் கவலைக்குள்;ளாக்கியுள்ளது.
முஸ்லிம்களின் ஒவ்வொரு விடயத்திலும் தலையீடு செய்து அவற்றை அழிப்பதையே பேரினவாதம் அதன் சவாலாக, இலக்காக முன் வைத்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த நாட்டிலுள்ள ஏறக்குறைய 10 ஆயிரம் பாடசாலைகளுகளில் ஏறக்குறைய 720 முஸ்லிம் பாடசாலைகளாகும் பாடசாலைகளின் கலைத்திட்டத்திற்காக அச்சிட்டு வெளியிடப்படும் பாடநூல்கள் வெறுமனே ஆதாரங்கள், ஆராய்ச்சிகள், ஆய்வுகள் செய்யபடாது எழுதப்படுவதில்லை. அதுவும் பல பாடநூல்கள் சிங்கள மொழியில் எழுதப்பட்டு அவை தமிழ் மொழிக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
இவ்வாறான ஒரு நிலையில் 11ஆம் ஆண்டு இஸ்லாம் பாடப் புத்தகத்தில் உள்ள முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான பாட அலகில் முஸ்லிம்களின் உண்மையான வரலாறு எழுதப்பட்டுள்ள போதிலும் பொது பல சேனாவின் அழுத்ததத்தின் காரணமாக அந்த வரலாற்றை மாற்றி எழு உத்தரவிடப்பட்டுள்ளது. இது பற்றி முஸ்லிம் சமூகத்தில் எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியாது. இது பற்றி எந்த அரசியல் வாதியும் பேசவில்லை. மாறா வாய் முடி மௌனிகளாக உள்ள அரசியல்வாதிகளுக்கு தேச பிதாக்களாக பேரினவாதிகள் மத்தியில் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
நேற்று மாலேப்பையில் நடைபெற்ற முஸ்லிம் விரோதக் கூட்டத்தில் உரையாற்றிய பெது பல சேனாவின் செயலாளர் அமைச்சர்களான ரவூப் ஹக்கீமையும் அதலாவுல்லாவையும் புகழந்து பேசியுள்ளதாக இன்றைய தமிழ் தினசரி பத்திரிகையின் செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தில் தாங்கள்தான் தலைவர்கள். நாங்கள்தான் அறிவாளிகள், நாங்கள்தான் எல்லாம் தெரிந்தவாகள், நாங்கள் சொல்லும் கருத்துக்களைத்தான் எல்லோரும் கேட்ட வேண்டும் என்று ஒரு கூட்டமும். பதவிக்கும், பணத்தும் சொகுசு வாழ்க்கைக்கும் அடிமைப்பட்டு அரசியல் வியாபாரம் செய்து கொண்டு முஸ்லிம்களை நட்டாட்டில் கைவிட்டுவிட்டு தலையாட்டும் மொம்மைகளாக செயற்படும் ஒரு கூட்டமுமாக உள்ள இந்த இரண்டு கூட்டங்களின் நடவடிக்கைகள் பர்மா முஸ்லிம்களின் நிலைமையை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் ஏற்படுத்துமா என்ற அச்சம் இன்று முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது. இந்த இரு தரப்பினரையும் விட்டுவிட்டு இந்த நாட்டில் வாழுகி;ன்ற முஸ்லிம்கள் நிம்மதியாக தங்களது மார்க்கக் கடமைகளைப் பின்பற்றி வாழ வேண்டும். அதற்கு எத்தகைய வழிமுறைகளகை; கையாள வேண்டும் என்று ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திக்கக் வேண்டும.;. இந்த நாட்டைப் பிரிக்கவோ அல்லது இந்நாட்டை சர்வதேசத்திடம் பிடித்துக்கொடுக்கவோ இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம்கள் முற்படவில்லை. இனியும் முற்படப் போவதுமில்லை. மாறாக இந்நாட்டையும் இந்நாட்டை ஆட்சி செய்ய அரசாங்கங்களையும் காப்பாற்றும் பணியில்தான் அன்று முதல் இன்று வரை இலங்கை வாழ் முஸ்லிம்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். செய்தார்கள். வரலாற்றைப் படித்தவர்களுக்கு இது புரிந்திருக்கும்.
தங்களது பெயர் ஊடகங்களில் வர வேண்டும். தங்களை பெரும் எழுத்தளர்கள் என்று பாராட்ட வேண்டும். தாங்கள்தான் மொழிப் பாண்டித்தியம் பெற்றவர்கள் என்று எல்லோரும் புகழ வேண்டும் என நினைப்போர். தங்களது ஆற்றல்களினூடாக பிற மதத்தவர்களுக்கு இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் மார்க்கக் கடமைகள் பற்றிய சரியான தெளிவை வழங்கத் தவறிவிட்டனர்.
அதுமாத்திமின்றி, கோடிக்கணக்கான ரூபாய்க்களைச் செலவு செய்து வெறும் புகழுக்காக திருமணங்களை 5 நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தும் பணம் படைத்தவர்கள் இந்நாட்டில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக உரியவர்களை உரிய முறையில் தெளிவுபடுத்த அவர்களின் பணத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டனர். இவற்றின் காரணங்களினால் ஏற்பட்டுள்ளதுதான் இன்றைய நிலைமை.
இந்நிலைமைகளிலிருந்து நம்மையும் எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்க வேண்டுமாயின் ஒவ்வொரு முஸ்லிமும் அறிவுபூர்வமாக சிந்திப்பது தங்களது கடமை என்பதை உணர வேண்டும்.
தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள முஸ்லிம்களை நோக்கிய நெருக்கடிகள் இன்றோ அல்லது நாளையோ முடிந்துவிடப்போவதில்லை. இதுவொரு நீண்டகாலத்திட்டத்தின்படி, தீர்மாணிக்கப்பட்ட அட்டவைணயின்படி நடந்தேரும் விடயங்களாகும்.
இலங்கை வாழ் முஸ்லிம்களையும் முஸ்லிம்களின் மார்க்கக் கடமைகளையும் கலாசார விழும்பியங்களையும் ஒழுங்குபடுத்தி செயற்படும் உலமா சபையையும் பிரித்தாளுவதுடன் அவற்றுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்து அதனூடாக ஒரு கட்டுக்கோப்பற்ற சமூகமாக இலங்கை வாழ் முஸ்லிம்களை சின்னாபின்னமாக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இலங்கை வாழ் முஸ்லிம்கள் துணைபோகாமலும் இவ்விடயங்கள் தொடர்பில் அலட்சியப் போக்குடன் செயற்படாமலும், உண்மைகளை உரியவர்களுக்கு உரிய முறையில் தெளிவுபடுத்தி நாம் மற்றவர்களைப் பாதிக்காமலும் மற்றவர்கள் நம்மைப் பாதிக்காமலும் இருக்க என்ன செய்யலாம் என்பதை நன்கு அறிவுபூர்வமாகச் சிந்தித்துத் செயற்படுவதே இன்றைய தேவையாக இருப்பதுடன் நம்மைக் காட்டிக்கொடுப்பவர்களையும் சமூகத்தை விட்டுப் பிழைப்பு நடத்துபவர்களையும் நம்பி ஒதுங்கியிருக்காமல் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் பொறுப்பாகும்.

i think the dissection of ACJU is right .because of the halal the BBS gathering in every city so now they don't have any headline together .Allha knows best
ReplyDeleteWhat we say in the paper or write a nice article in the news paper is always a stro of a paddy (Vikkol). Ask more to Allah for Sri Lanka Ummath.
ReplyDeleteநன்றி, ஒவ்வொரு பிரசுரத்திலும் எதிர்பார்க்கப் படும் ஆசிரியர் தலையங்கம் என்றாவது ஓர் நாள் இப்படியான அறிவுரைகளக் கொண்டு வருவதும் வரவெற்பிற்குரியதுதான். அக்கறையோடு சிந்திக்கக் கூடியவர்கள் பணம் படைத்தவர்களைக்கொண்டு சமூகத்துக்கு தேவையான தொடர்பாடல் முறைகளை நிவர்த்தி செயவதில் முனைப்பாய் ஈடுபடவேண்டும்.( a televition medea is important ).
ReplyDeleteமார்க்கத்தின் பெயரால் பிரிவினையாய் செயற்படுபவர்கள் எல்லோரும் குர்ஆன் ஹதீஸை முன்வைத்துத்தான் பிரிவினையோடு செயற்படுகிறார்கள் போலும். அவர்கள் சொல்வது...... ஜமியத்துல் உலமா சபை சிர்க் போன்ற கண்டிக்கப்பட வேண்டிய விடயங்கல் இலகுவான அசமந்தப் போக்கயே கையாள்கிறது என்பதாகும். அண்மையில் உலமா சபையால் வெளியிட்ட பௌத்தர்களின் அன்னதானத்துக்காய் முஸ்லிம்கள் நன்கொடைகள் வழங்கலாம் ( இது சரியா? ) என்பதை பிழையாய் விளங்கிய ஒருசில மக்கள் புத்தர்சிலையை நட கண்ணாடிப் பெட்டி அமைத்துக்கொடுததை உதாரணமாய் சொல்லலாம்.
ஆக அனைத்துத்தரப்புகழும் குர்ஆன் ஹதீசை முனவைத்து தம் முரண்பாடுகளைப் பற்றி பேசி ஓர் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். ஆனால் உலமா சபை எந்த ஒரு முன்னெடுப்பும் செய்த்தாய் காண முடியவில்லை.
இதற்குப் பின்னராவது உலமாசபையானது மற்றவர்கழுடன் மக்கள் மன்றின் முன்னின்று பேசி இதற்கு ஓர் முடிவுகாண வேண்டும்.
தம் பெயர் இணைய தளத்தில் வரவேண்டும் என்பதற்காய் எழுதுகிறார்கள் என்று சொல்வது மற்றவர்களை இழிந்து பேசும் ஓர் செயலாய்தான் பார்க்கமுடிகிறது.
இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது! எம்மவர்களில் எத்தனை பேருக்கு இந்த பிரச்சினையைப்பற்றி தெரியும்? எம் மாதர்களின் நிலை என்ன? விழிப்போம்! விழித்தெழுவோம்!
ReplyDeleteஎம் அரசியல் சாக் காடையர்களை முற்றாக புறக்கணிப்போம்! நாம் நமக்காக எழுவோம்! சிந்திப்போம்!
அல்குர்ரானே எம்மை சிந்திக்கும்படி பல இடங்களில் சொல்கிறது! ஆனால் அதை விட்டு விட்டு இந்த போலிச்சாமியர்க்ளிடம் கை ஏந்துவதா?
Eppadiyane mureyil nadavedikkiheqal edukkeavendum
ReplyDeleteI wish in future we have to kick out those politician who never support Muslims
ReplyDeleteசற்றுப்பொறுமையுடனிருப்பொம்
ReplyDeleteதயவு செய்து யாரும் எதுவித அவசரமான முடிவுகளை எடுக்கவேண்டாம் , முஸ்லிம்களுக்குள் நாமே நமக்குள் மனவேதனைப்ப்டுமளவிற்கு கடினமான வார்த்தைப்பிரயோகங்களை உபயோகிக்கவேண்டாம். அல்லாஹ் கண்டிப்பாக தொழுகையாளிகளுடனும் பொறுமையாளிகளுடனும் இருக்கின்றான் ஆகவே நாம் சற்று பொறுமையுடனிருந்து பார்ப்போம். கண்டிப்பாக ஹாலால் சான்றிதழைதானை ஜமிய்யதுல் உலமா விட்டுக்கொடித்துள்ளது. அதனால் ஒன்றும் நாம் தோற்றுவிடவில்லை ஆனால் கண்டிப்பாக இனிமேல் யார் வந்தாலும் ”இறைவன்மீது ஆணையாக” நம்து அடிப்படைகளில் எதையும் விட்டுக்க்கொடுக்க நாம் தயாரில்லை இதை அனைவரும் ஞாபகத்தில் வைத்து சற்று பொறுமையுடனிருப்பொம். இன்ஸா அல்லாஹ், இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டான்.... ”அல்லாஹு அக்பர்”
Dear , ஒரு எதிரியை தாக்குவதற்கும், வீழ்த்துவதற்கும், ஒரு சரியான கட்டமைக்கப்பட்ட திட்டம் தேவை . திட்டமிட்டு தாக்குவதென்பது எதிரியை நேருக்கு நேர் தாக்குவது / சுற்றி வளைத்து தாக்குவது / ஆயுதங்களால் தாக்குவது / கருத்துக்களால் வீழ்த்துவது / அவசரமாக வீழ்த்துவது / பொறுத்திருந்து வீழ்த்துவது / எமது வலையில் அவர்களை வீழ்த்துவது / அவர்கள் வலையில் அவர்களையே வீழ்த்துவது , இப்படி நிறைய விடயங்களை ஆராய்ந்து தக்க தருணத்தில் புத்தி சாதுரியமாய் அவசரபடாமல் நிதானமாய் வீழ்த்த வேண்டும் /
ReplyDeleteஜம்மியத்துல் உலமா சபை எடுத்த முடிவு சரியே / ஜம்மியத்துல் உலமாவையும் முஸ்லிம் மக்களையும் பிரிக்க சதி நடக்கிறது . யாரும் ஏமாந்து விட வேண்டாம் .
ஒரு சமூகத்தை/இனத்தை வீழ்த்தி சின்னாபின்னமாக்கி , அழித்தொழிப்பதற்கு செய்ய வேண்டியது, அச்சமூகத்திலுள்ள 1. பொருளாதரத்தை வீழ்த்துவது 2. அறிவாளிகள், புத்திஜீவிகளை அழிப்பது 3. சமய / மார்க்க போதகர்கள் / உலமாக்களுக்கும் , மக்களுக்கும் இடையிலுள்ள தொடர்பை இல்லாதொழிப்பது 4. அதிகாரமில்லாத சக்தி குறைந்த அறிவிலி அரசியல்வாதிகளை அச்சமூகத்திற்கு பொறுப்பலர்களாக மாற்றுவது 5. அச்சமூகதிட்கு அச்சத்தை ஏற்படுத்தி , வீரமற்றவர்களாக மாற்றுவது . 6. இறைவனுக்கும் ,மக்களுக்கும் இடையில் இடைவெளியை அதிகரிப்பது..
இவைகள் செயல்வடிவம் பெறும்போது அச்சமூகம் இருப்பிடம் தெரியாமல் அழிந்து விடும் . இப்போதைக்கு எமது முஸ்லிம்களின் தலைமை பீடம் உலமாக்களும் , புத்தி ஜீவிகளும் நிறைந்த அமைப்பு ஜம்மியத்துல் உலமா சபையும் , ஏனைய இஸ்லாமிய உலமா அமைப்புகளும் மட்டுமே, இவ்வமைப்புகளுக்கு முஸ்லிம்களாகிய நாம் போதிய பலம் சேர்க்க வேண்டும், பிரிந்து நின்று செயற்படாமல், ஒற்றுமையை பற்றிப் பிடிப்போம் ஆமீன் ....