Header Ads



எமது மார்கத்தை பாதுகாக்க முயற்சி செய்தவர்களாக மரணிப்போமா..?


(அபூ அலி)

நாம் மரணிக்கும் வரை ஹலாலான இரத்தமே எமது உடல்களில் ஓடிக்கொண்டிருக்க மற்றும் எமது  முழு வாழ்கையும் ஹலாலான வகையிலே அமைந்து இருக்க  இறைவனிடம் அதிகமாக பிரார்த்திக் கொள்வோமாக.!!!! அனைத்து  குழப்பங்களில் இருந்தும் எம் சமூகத்தை பாதுகாக்க போதுமானவன் இறைவன் ஒருவனே.

இன்றைய நாள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில்  விட்டு கொடுப்பு என்ற படலத்தில் அந்த சமூகத்தின் ஒரு உரிமை தட்டில் வைத்து கொடுக்கப் பட்டிருக்கின்றது. ஒரு சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதிபடுத்தும் அமைப்பு அல்லது நிறுவனம் தான்  பிரதிநிதிப்படுத்தும் சமூகத்திற்கு தேவையான ஒரு விடயத்தை செய்ய முடியாத போது  எவ்வாறு பெரும்பான்மை என சொல்லிக் கொண்டு சிறுபான்மை மக்களின் உரிமைகளை நசுக்குகின்றவர்களுக்கு அல்லது அதற்கு துணை போகின்றவர்களுக்கு தேவையான விடயத்தை செய்வதற்கு அதிகாரம் இருக்கிறது? 

இந்த வகையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை  எந்த விதமான சான்றிதழ்களும்  வழங்குவதில்லை என முடிவெடுத்திருந்தால் அது ஒரு வகையில் நியாயமானதாக இருந்திருக்கும். ஆனால் எமது நாட்டு சமூகத்திற்கு ஹலால் சான்றிதழ் பெறப்பட்டவைகளை பயன்படுத்த முடியாது ஆனால் எமது நாட்டில் இருந்து ஹலால் சான்றிதழ் பெறப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யபடலாம் என்ற முடிவின் யதார்த்தம் தான் என்ன? அதிலிருந்து பெறப்படுகின்ற இலாபங்களும் ஹலாலானது தானே அதை என்ன செய்வது? 

இன்றைய இக்கட்டான நிலையில் தாங்களை தேடி வருகின்றவர்களுக்கு தாங்கள் சான்றிதழ் வழங்கி  அவர்களது வியாபாரத்திற்கு  உதவி செய்வோம் தாங்கள் யாரையும் தேடி சென்று சான்றிதழ் வழங்க போவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்து தங்களது நேர்மையை சமூகத்திற்கு நிரூபித்து காட்டி இருக்க வேண்டிய ஜம்மியத்துல் உலமாவின் இந்த முடிவு எமது  சமூகத்தை முற்று முழுதாக ஏமாற்றியதாகவே என்னால் கருத முடியும். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இறைவனை பயந்து கொண்டவர்களாக பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படும் அந்நாளை எதிர் கொள்வதற்கு இந்த முடிவு எந்த வகையில் அவர்களை பாதுகாக்கும் என நினைத்தார்களோ! ஒவ்வொரு உள்ளங்களையும்  அறியக்  கூடிய இறைவனே அனைத்தையும் அறிந்தவன். நாட்டின்  சமாதானம் இவ்வாறான விட்டுக் கொடுப்பின் மூலமாக தான் பாதுகாக்க முடியும் என்றால் இன்னும் விட்டுக் கொடுக்க வேண்டியவைகள் நிறையவே உண்டு. 

எமது சகோதரிகள் ஜீன்ஸ், டீ சேட் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிவதன்  மூலம் மற்றும்  ஒரு குடும்பத்தில் 1 அல்லது 2 குழந்தைகளை மட்டும்  பெற்றுக் கொள்வதன் மூலம் நாட்டின் சமாதானத்தை பாதுகாப்போம் என  சமூகத்திற்கு வேண்டிக்கொள்ளுங்கள். ஒரு ஊரில் ஒரு பள்ளிவாசல் போதுமானது மற்றவைகளை உடைத்து விடுங்கள் என பொது பல சேனா விடமே சொல்லி விடுங்கள். முஸ்லிம் , தனியார் பாடசாலைகளை மூடி விட்டு அனைத்து இன மக்களும் அல்லது ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கின்ற கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்களை இணைத்து கொள்ள அரசாங்கத்தை வேண்டிக்கொள்ளுங்கள்.  இவ்வாறு  பல விடயங்களை விட்டு கொடுத்து ஆட்சியாளர்களையும் அக்கிரமக்காரர்களையும் சந்தோஷ படுத்துவோம். இவை எல்லாம் விட்டு கொடுத்து நாட்டின்  சமாதானத்தை பாதுகாப்போமா அல்லது எமது மார்கத்தை பாதுகாக்க முயற்சி செய்தவர்களாக மரணிப்போமா??  

மரணம் ஒரு முறை தான் ..!!

14 comments:

  1. அன்புக்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே இந்த கலால் விடயத்தில் எமதுரிமையை நாம் பாதுகாக்கும் முழு பொறுப்பிலும் உள்ளோம் எனவே நாம் அனைவரும் ஒருமித்து கலால் இல்லாத அனைத்துப் பொருட்களையும் புறக்கணித்து எம்முடைய மார்க்கத்தின் அடிப்படையை பாதுகாத்து அல்லாவின் அருளைப் பெற்றுக்கொள்வோமாக வாழும் போதும் மரணிக்கும் போதும் முழுமையான இஸ்லாமியராக இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.
    அன்புடன் அப்துல்சலாம்.

    ReplyDelete
  2. At least now people talking this, really welcome. I love this kind of mentality is uprising among our brothers.

    ReplyDelete
  3. can i do anything to this problem
    i cant looking this kind of news

    ReplyDelete
  4. Yes brother u r correct! ACJU won't be a good leads for Muslim!

    ReplyDelete
  5. அபூ அலி சறறு ஆவேஷப்படுகிறீர்போலும், உலமாசபை தாமதமானாலும் சரியான முடிவத்தான் எடுத்துள்ளது. இச்சான்றிதழ் வழங்குமுறை வளக்குக்கு வருமுன் இது ஹறாமானது அல்லது அது பன்றிக்கொழுப்பு கொண்டது போன்ற சிறு துண்டுப்பிரசுரங்களால் அல்லது சில பயான்களால் எம் சமுதாயம் ஹறாத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதுதான். இப்போது சில வதந்திகள் போன்றவற்றால் சில நடைமுறச்சிக்க்கல்கள் ஏற்படும் அவ்வளவுதான்.
    ஆனால உலமா சபை இதைக கைவிட்ட முறையானது ஓர் தந்திரமற்ற முறையில் நடந்து கொண்டுள்ளது போலத்தோன்றுகிறது.
    ஹலால் பிரச்சனையை முன்னிறுத்தி பிரச்சனை செய்யும் பொ.ப.சேனர்கள், ஜனாதிபதி, நீதித்துறை சட்டவல்லுிர்கள், அமைச்சர்குழு, எதிர்ப்பற்ற எதிர்ப்புள்ள ஏனைய மதத்தலைவர்கள், மனித உரிமைகள் குழு, வர்த்தகசங்கம் போன்ற அனைத்துக்குழுக்களின் முன்னிலையில் இனியொரு பிரச்சனையும் வரக்கூடாது என்ற ஒப்பந்தத்தில் இதனைக்கைவிடும் நிகழ்வை ஓர் உத்தியோக, சட்ட பூர்வமானதாய் செய்து முடிக்க வேண்டும். அதுதான் சிறந்தது.
    அவ்வாறு செய்வதால் மேலும் பிரச்சனைகள் எழாதவாறு தடுத்துக்கொள்ள முடியும் அல்லது பிரச்சனை செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த இது உதவும்.

    ReplyDelete
  6. அபு அலி அவர்களே
    அசலாமு அழைக்கும் மேலும் எனது வாழ்த்துக்களும்
    விட்டுக்கொடுக்க வேண்டியவைகள் இன்னும் பல இருந்தாலும் பரவயில்லை இதைப்பார்த்தவது உலமா சபையும் அதில் உள்ளவர்களும் மேலும் நமது அரசியல் வாதிகளும் தவ்ஹீத்வதிகள் என்று மர்தட்டிக்கொல்பவர்களும் திருந்தட்டும்

    ReplyDelete
  7. அபூ அலி சறறு ஆவேஷப்படுகிறீர்போலும், உலமாசபை தாமதமானாலும் சரியான முடிவத்தான் எடுத்துள்ளது. இச்சான்றிதழ் வழங்குமுறை வளக்குக்கு வருமுன் இது ஹறாமானது அல்லது அது பன்றிக்கொழுப்பு கொண்டது போன்ற சிறு துண்டுப்பிரசுரங்களால் அல்லது சில பயான்களால் எம் சமுதாயம் ஹறாத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதுதான். இப்போது சில வதந்திகள் போன்றவற்றால் சில நடைமுறச்சிக்க்கல்கள் ஏற்படும் அவ்வளவுதான்.
    ஆனால உலமா சபை இதைக கைவிட்ட முறையானது ஓர் தந்திரமற்ற முறையில் நடந்து கொண்டுள்ளது போலத்தோன்றுகிறது.
    ஹலால் பிரச்சனையை முன்னிறுத்தி பிரச்சனை செய்யும் பொ.ப.சேனர்கள், ஜனாதிபதி, நீதித்துறை சட்டவல்லுிர்கள், அமைச்சர்குழு, எதிர்ப்பற்ற எதிர்ப்புள்ள ஏனைய மதத்தலைவர்கள், மனித உரிமைகள் குழு, வர்த்தகசங்கம் போன்ற அனைத்துக்குழுக்களின் முன்னிலையில் இனியொரு பிரச்சனையும் வரக்கூடாது என்ற ஒப்பந்தத்தில் இதனைக்கைவிடும் நிகழ்வை ஓர் உத்தியோக, சட்ட பூர்வமானதாய் செய்து முடிக்க வேண்டும். அதுதான் சிறந்தது.
    அவ்வாறு செய்வதால் மேலும் பிரச்சனைகள் எழாதவாறு தடுத்துக்கொள்ள முடியும் அல்லது பிரச்சனை செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த இது உதவும்.

    ReplyDelete
  8. Dear Brother, nenga yaru Mufthiya illa allawa avangalidam ahirath la enna ketkappadu endu solrathuku, summa ethuku nattu muslim makkala ithu mathiri karuththukala solli thundi viduringa.
    nenga sariyana muslim enda halal enna endu ongaluku theriyum. athuketpa ungada unavu muraihala peni nadanthukollunga, atha vittutu makkala thundi vida venam.

    ReplyDelete
  9. சகோதரர் அவர்களின் ஆர்வம் சமூக அக்கறை பாராட்டுக்குறியது அதேநேரம் அவதானமும் வேண்டும் இத்தனை நாள் போராட்டத்தில் நாம் தலைவர்கள் என போற்றிய எவரும் வாய்திறக்கவில்லை உலமாக்களை எவ்வளவோ கூடாத வார்த்தையில் திட்டியும் ஒரு அரசியல் வாதிகூட அதை கண்டிக்கவில்லை அவர்கள் இந்த பிரச்சினைக்காக நம்மைவிடவும் பலநூறுமடங்கு சமூக அக்கறையோடு செயல்படுபவர்கள் இதனால் அவர்களுக்கு சொகுசான வாழ்க்கையோ அந்தஸ்தோ சமூகத்தில் கிடைக்கப்போவதில்லை அல்லாஹ்வுக்காக ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள் நமக்கு அதன்வெளிப்படை தோல்வியாக இருந்தாலும் அல்லாஹ் அதில் மறைமுக வெற்றியை வைத்திருப்பான் இன்ஷா அல்லாஹ். ஒரு பொருளுக்கு ஹலால் சான்றிதல் சாதாரணமாக கொடுப்பதில்லை உற்பத்தி செய்யும் இயந்திரத்தில் ஹறாமான உற்பத்தி இடம்பெறக்கூடாது அப்படிப்பார்த்தால் எந்த ஒரு கம்பனியும் இரண்டு இயந்திரங்களை வைத்து உற்பத்தி செய்யாது உற்பத்தி செய்யப்படுவது ஹலாலாக இருக்கும் நாட்டுக்குள் வினியோகிப்பது ஹலால் சான்றிதழ் இருக்காது அல்லாஹ் மிகவும் அறிந்தவன் இந்த அமைப்பில்தான் நான் இதை புரிந்து கொள்கிறேன். தயவு செய்து விமர்சிக்கும்போது அவர்கள் மனம் உடைந்து போகும்விதமாக எதுவும் எழுதவேண்டாம் இதற்காக அவர்கள் செய்யும் தியாகம் எம்மாத்திரம் அல்லாஹ் அவர்களுக்கு நல்ல அனுகுமுறைகளையும் மன வலுவையும் கொடுக்க பிராத்திப்போம்

    ReplyDelete
  10. உபயோகிக்கவேண்டாம். அல்லாஹ் கண்டிப்பாக தொழுகையாளிகளுடனும் பொறுமையாளிகளுடனும் இருக்கின்றான் ஆகவே நாம் சற்று பொறுமையுடனிருந்து பார்ப்போம். கண்டிப்பாக ஹாலால் சான்றிதழைதானே ஜமிய்யதுல் உலமா விட்டுக்கொடித்துள்ளது. அதனால் ஒன்றும் நாம் தோற்றுவிடவில்லை ஆனால் கண்டிப்பாக இனிமேல் யார் வந்தாலும் ”இறைவன்மீது ஆணையாக” நம்து அடிப்படைகளில் எதையும் விட்டுக்க்கொடுக்க நாம் தயாரில்லை இதை அனைவரும் ஞாபகத்தில் வைத்து சற்று பொறுமையுடனிருப்பொம். இன்ஸா அல்லாஹ், இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டான்.... ”அல்லாஹு அக்பர்”

    ReplyDelete
  11. சற்றுப்பொறுமையுடனிருப்பொம்
    தயவு செய்து யாரும் எதுவித அவசரமான முடிவுகளை எடுக்கவேண்டாம் , முஸ்லிம்களுக்குள் நாமே நமக்குள் மனவேதனைப்ப்டுமளவிற்கு கடினமான வார்த்தைப்பிரயோகங்களை உபயோகிக்கவேண்டாம். அல்லாஹ் கண்டிப்பாக தொழுகையாளிகளுடனும் பொறுமையாளிகளுடனும் இருக்கின்றான் ஆகவே நாம் சற்று பொறுமையுடனிருந்து பார்ப்போம். கண்டிப்பாக ஹாலால் சான்றிதழைதானை ஜமிய்யதுல் உலமா விட்டுக்கொடித்துள்ளது. அதனால் ஒன்றும் நாம் தோற்றுவிடவில்லை ஆனால் கண்டிப்பாக இனிமேல் யார் வந்தாலும் ”இறைவன்மீது ஆணையாக” நம்து அடிப்படைகளில் எதையும் விட்டுக்க்கொடுக்க நாம் தயாரில்லை இதை அனைவரும் ஞாபகத்தில் வைத்து சற்று பொறுமையுடனிருப்பொம். இன்ஸா அல்லாஹ், இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டான்.... ”அல்லாஹு அக்பர்”

    ReplyDelete
  12. இன்னும் சிலரின் கருத்து ஹலால் சான்றிதல் ஒரு பித்அத் தானே அதை விடுவதில் என்ன தப்பு இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறதல்லவா?

    ReplyDelete
  13. Insha Allah we scarifies our life for protect our deen.

    ReplyDelete
  14. Halal sandrithal valankiya ACJU vitra pilay ennaventral ithanai varthaja satta reithiyaka pathivu saithillamai avvaru saithirundal ithu nadanthirukkathu silaneram enru ninaikalam .ellam walla iravanin nattam allahu akbar

    ReplyDelete

Powered by Blogger.