சாதனை படைத்தது இலங்கை
இலங்கையை மலேரியா நோய் இல்லாத நாடு என்ற அறிவிக்க உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுத்து வருவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் பேச்சாளர் ஒருவரது தகவல்படி, உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட குழு ஒன்று கடந்த மாதம் இலங்கை வந்து, இது தொடர்பில் ஆராய்ந்துள்ளது. இந்த குழு யாழ்ப்பாணம், கொழும்பு, ஹம்பாந்தொட்டை போன்ற மாவட்டங்களுக்கு விஜயம் செய்து, மலேரியா தொற்று தொடர்பில் ஆய்வு செய்துள்ளது.
இதன்அடிப்படையில் தயாரிக்கப்படுகின்ற அறிக்கையை கொண்டு, இலங்கை மலேரியா நோய் இல்லாத நாடு என்று அறிவிக்கப்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment