கட்டுகஸ்தோட்டையில் இரவு வேளைகளில்திருட்டில் ஈடுபட்ட மாணவர்கள் கும்பல் கைது
(மொஹொமட் ஆஸிக்)
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் இரவு வேளைகளில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கில்கள் திருட்டில் ஈடபட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவர்கள் கும்பல் ஒன்றை சேர்ந்த மூன்று மாணவர்களை கட்டுகஸ்தோட்டை பொலீஸார் நேற்று இரவு கைது செயதுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை வத்துகாமம், மற்றும் கலகெதர பொலிஸ் பிரிவுகளில் இவ்வாரான திருட்டுகள் இடம் பெற்றுள்ளதாக பொலீஸார் தெரிவிக்கினிறனர்.
நேற்று 2013 03 26 இரவு கட்டுகஸ்தோட்டை நகரை அன்மித்த பிரதேசத்தில் வைத்து திருடப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றுடன் இம் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த் பிரபல பாடசாகைளில் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் என்றும் இன்னும் ஒரு மாணவர் கைது செய்யவுள்ளதாகவும் பொலீஸார் தெரிவிக்கின்றனர்.
இம் மாணவர்கள் திருடிவுள்ள முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கில்கள் எதையும் விறபனை செய்ய வில்லை என்றும் அவைகளை செலுத்தும் போது எரிபொருள் முடிவடைந்த இடத்திள் விட்டுச் சென்றுள்ளதாகவும் பொலீஸார் தெரிவிக்கனிறனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களை இன்று கண்டி நீதவான் முன் ஆஜர் செய்யவள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.

Post a Comment