Header Ads



முஸ்லிம்களுக்கே தற்போது அதிகளவு பிரச்சினை - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா


முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தல்களை எதிர் கொண்டிருப்பதாகவும் இந்த விவகாரத்திற்கு அரசாங்கம் இதுவரை தீர்வு காணவில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்கள் முன்னர் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்ததாகவும் இப்போது முஸ்லிம்கள் அதிகளவான பிரச்சினைகளை  எதிர்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மதங்களிடையே  சௌஜன்யமற்ற நிலைமை அதிகரித்து வருவதாகவும்  சில இடங்களை  சில குழுக்கள் தாக்கி வருவதாகவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.  

தான் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் இத்தகைய விடயங்கள் இடம்பெற்றன. ஆயினும்  அவற்றை உடனடியாக  தடுத்து நிறுத்தியிருந்ததாகவும்  ஆட்களைக் கைது செய்ததாகவும் அவர் கூறியதுடன்,  மதஸ்தலங்களைத் தாக்குவதற்கு முயற்சித்ததற்காக பிக்குகளைக் கூட தாங்கள் கைது செய்ய வேண்டிய நிலைமையிருந்ததெனக் கூறுவதையிட்டு கவலையடைவதாக அவர் தெரிவித்துள்ளார். 

இத்தகைய சம்பவங்கள் ஊடகங்களில் வெளிவந்த போது அதனை  அரசாங்கம் உடனடியாக தலையிட்டு கையாண்டது. ஆனால், இப்போது அவ்வாறு இடம்பெறுவதாக  தென்படவில்லை.  மதங்கள் மற்றும் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம் அற்ற நிலைமை காணப்படுகிறது என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி இந்த விடயங்கள் தொடர்பாக அரசியல் தலைவர்களை சார்ந்திருப்பதற்குப் பதிலாக சிவில் சமூகம் மதத்தலைவர்கள் மற்றும் ஏனையவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 

அதேவேளை தனது பிள்ளைகள் ஒருபோதும் அரசியலுக்குள் பிரவேசிக்க மாட்டார்களெனத் தெரிவித்த அவர். அரசியல் பிரவேசித்திற்கு எதிராகவே தான் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியதாகக் கூறியுள்ளார்.  

எனது பிள்ளைகள்  இந்த நாட்டை நேசிக்கின்றனர். ஆனால்,  அரசியலில் பிரவேசிக்க வேண்டிய தேவை இல்லையென  அவர்களுக்கு தொடர்ந்து நான் கூறிவந்துள்ளேன். நாட்டிற்கு சேவையாற்ற அவர்கள் விரும்பினால் அதற்கு பல வழிகள் உண்டு என்று நான் கூறியுள்ளேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.  

இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்த பின்னர் தான் தொடர்ந்தும் வேறு பல வழிகளில் நாட்டிற்கு சேவையாற்றி வருவதாக   சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.   சில சமயங்களில் இடையூறுகளைத் தவிர அரசாங்கத்திடமிருந்து நான் எந்தவொரு உதவியையும் பெற்றுக்கொள்வதில்லை. 

ஆனால்,   நான் தொடர்ந்து சமூகத்திற்காக எதைச் செய்ய விரும்புகிறேனோ அதனை செய்து வருகிறேன். தனிப்பட்டவர்கள் மற்றும் ஏனையோர்  ஊடாக அவர்களின் உதவியைப் பெற்று  சேவையாற்றி வருகிறேன் என்று திருமதி குமாரதுங்க கூறியுள்ளார்.

5 comments:

  1. இவரது காலத்தில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருந்தது உண்மை தான். அதை மறக்கவும் முடியாது.
    ஆனால் இப்பொழுது முஸ்லிம்களுக்கு எதிராக BBS ஐ தூண்டிவிட்டு, பின்னாலிருந்து திட்டங்களை வகுத்துக் கொடுக்கும் யூதர்களுக்கு இந்நாட்டின் கதவுகளைத் திறந்து கொடுத்தது இவர் தானே! இந்த ஒன்றில் தானே இவருக்கும் இவரது ஆட்சிக்கும் அச்சாணியாக இருந்த மறைந்த SLMC தலைவர் அஷ்ரபுக்கும் மனக் கசப்பு ஆரம்பித்தது! அதன் பிறகு தானே அஷ்ரபின் கொலையில் ஆரம்பித்து , நாட்டில் அரசியல் இஸ்திர நிலைமையை குலைத்து, பலவாறு நாட்டின் அரசியலில் செல்வாக்குச் செலுத்தி, இன்று BBS வரை தமது கை வரிசையை காட்டி நிற்கிறார்கள். இந்த ஒரே ஒரு விவேகமற்ற செயலால் நாட்டையும், சிறு பான்மையையும் இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டார். அவர் எமக்குச் செய்த நலவுகளை மொத்தமாக மறக்கடிக்கச் செய்து விட்டார்.

    ReplyDelete
  2. So what do you are trying to say Saneej?

    whatever she did ,whether it was for politics or not, in the current context, at least she speaks in supporting to Muslims in this critical juncture.

    Even Mervin Silva speaks on behalf of us. sadly none of our reps speak.

    It seems you have just jumped to make a comment without realising the reality. there is a saying: "most people listen to answer not to understand" it is very appropriate for you.

    If you can? [I do challenge that you can not!!!] make any Muslim MP to speak against the BBS. if you made it. you can blame others otherwise please hold your tongue.


    ReplyDelete
  3. சரி சரி எல்லாம் சரி Mr. Saneej Sharifdeenதற்போது இருக்கும் நிலைமையைவிட அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் மக்கள் நிம்மதியாகத்தான் இருந்தார்கள் இப்படிப்பட்டகஸ்டங்களையும்,வேதனைகளையும், துவேசங்களையும் அனுபவிக்கவில்லை குடும்பமாகச்சேர்ந்து நாட்டைவாரி வாரி தம் சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டாரா இல்லையே அவரவர் சுய நலத்துக்குக்காக் ஒன்றும் பேசவேண்டாம் இருப்பதைவிட நல்லாட்சி கிடைக்கும் என்பது 101 வீதம் உறுதி ஆகவே சந்திரிகா அம்மையார் ஆட்சியமைக்க அனைவரும் கைகொடுப்போம்.

    ReplyDelete
  4. @ Abuaymen & Renees

    சகோதரர்களே எனது பின்னூட்டலை கொஞ்சம் நிதானமாக பாருங்கள். நான் ஒன்றும் அம்மையாரின் பேச்சில் சொக்கி நிற்கவில்லை. ஆனால் அஷ்ரபின் தலையீட்டிலோ அல்லது அவரது சொந்த நோக்கிலோ அவர் காலத்தில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாய் இருந்தோம். சமாதானப் பேச்சுக் காலத்திலும் 50 முஸ்லிம்கள் வரை கொல்லப் பட்ட பின்னர் இவர் பாதுகாப்பு அமைச்சை கையில் எடுத்தார். கொலைகள் அப்படியே நின்றன. இது போன்ற சில பாதுகாப்புக்கள் இவரால் கிடைத்தாலும் இப்போதுள்ள பிரச்சினைக்கு இவரே முழுக் காரணம். கொஞ்சம் மீண்டும் பாருங்கள் என் பின்னூட்டலை. இவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகால் என்பதில் எனக்கு சந்தேகம் இல்ல.

    ReplyDelete

Powered by Blogger.