Header Ads



களியாட்டங்களை நிறுத்திவிட்டு, போர் அருங்காட்சியகமொன்றை அமைக்க வேண்டும்


தயட்ட கிருள போன்ற களியாட்டங்களை நிறுத்திவிட்டு, போர் அருங்காட்சியகமொன்றை அமைக்க அரசாங்கம் முன்வர வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். 

நாடடில் நடைபெறுகின்ற பயனற்ற களியாட்டங்களினால் வருடாந்தம் அதிகளவிலான பணம் விரயமாகின்றது. இந்தப் பணத்தைப் பயன்படுத்தி போர் அருங்காட்சியகமொன்றை அமைக்க வேண்டும்.

இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால், நாட்டுக்கும் இந்திய பிராந்தியத்திற்கும் ஏற்படுத்திய அழிவுகளை சாட்சியங்களுடன் பார்வையிட முடியும்.

எனவே தேசிய அருங்காட்சியகத்தில் முக்கியமான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதனால், அதன் ஓர் பகுதியில் போர் அருங்காட்சியகத்தை அமைக்க முடியும்.

இருப்பினும் நாட்டில் இன்னமும் புலிகளினால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளை அரசாங்கம் சரியான முறையில் வெளிப்படுத்தவில்லை.

இதனால் புலிகளின் வலையமைப்பு மிகவும் தீவிரமான முறையில் நாட்டுக்கு எதிராக சர்வதேச ரீதியில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது. இதேவேளை,  வியட்னாமில், இஸ்ரேலில் இவ்வாறான போர் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது போரினால் ஏற்பட்ட அழிவுகள் இந்த அருங்காட்சியகங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஒமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. ஊரு ரெண்டு பட்டு இரிக்கக்கொள ஊமையன் உளுந்துவட கேட்டானாம் - அப்பிடி இரிக்கி இவர்ற கத.

    ReplyDelete
  2. உண்மையில் சாமிக்கு பொருத்தமான பெயர்தான் ஓமல் பே

    ReplyDelete

Powered by Blogger.