Header Ads



முஸ்லிம் சமுதாயத்தின் இன்றைய எதிர்பார்ப்பு..!


(எம்.எம்.ஏ ஸமட்)

ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு. இம்முது மொழியின் யதார்த்தம் எல்லோருக்கும் விளங்குகின்றபோதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நாட்டம் கொள்வதில்லை. ஓற்றுமையின் பலம் அதன் வெற்றி என்பவை பற்றி பல வரலாறுகள் நம்முன் படிப்பினைக்காகவுள்ளன. எந்தொரு சக்தியினாலும் ஒன்றுபட்ட சமுதாயத்தை அழித்துவிட முடியாது. ஓன்றுபட்ட சமூகங்கள் அழிக்கப்பட்ட வரலாறுகளும் கிடையாது.

ஒரே இறைவன், ஒரே நபி, ஒரே குர்ஆன், ஒரே கிப்லா என்று  ஏற்று வாழும் நாம் நமக்குள் பல கொள்கைகளை நாமாகவே வகுத்துக்கொண்டு அமைப்புக்களாக பிரிந்து செயற்படுகிறோhம். பிரிந்து நின்று செயற்பட்டு எதைச் சாதிக்கப்போகின்றோம். அந்தந்தக் கொள்கைகளுக்கேற்றவாறு குர்ஆனின் வசனங்களையும் ஹதிஸ்களையும் சேகரித்துக்கொண்டு நாங்கள் கொண்ட கொள்கைளே சரி என்றும் அவற்றை நியாயப்படுத்தியும் வாழுகின்றோம். கொள்கைகளின் அடிப்படையில் பிரிந்து கொள்கைகளை மேலோங்கச் செய்வதற்காகப் பாடுபடுகின்றோhம். யதார்த்தங்களை மரணிக்கச் செய்தும்; இஸ்லாம் இறுக்கமான மார்க்கம் என்றும் காட்ட முற்படுகின்றோம். 

ஆணும் பெண்ணும் இவ்வாறுதான் ஆடை அணிய வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு அழகாகக் கற்றுத்தந்திருக்கையில், அந்தவிடயத்தில் அவரவர் உரிமைகளுக்கு இஸ்லாம் மதிப்பளித்திருக்கின்ற நிலையில,; நாம் கொண்ட கொள்கைகளின் அடிப்படையில் ஆடைகளின் வடிவங்களை மாற்றிக்கொண்டோம். இதனால் நாம் சிறுபான்மையினராக வாழும் இந்த நாட்டில் ஏனைய மதத்தவர்களின் பார்வையில் இஸ்லாத்தை ஒரு இறுக்கமான மார்;க்கமாகவும் இலகுதன்மையற்ற மார்;க்கமாகவும் காட்டுகின்றோம். அவர்கள் நமது இஸ்லாத்தை எந்தந்தப் புலக்காட்சி கொண்டு புலத்தோற்றம் கொள்கிறார்களோ அந்த அவர்களின் பிழையான புலக்காட்சிக்கும் புலத்தோற்றத்துக்கும் வழியமைத்தது நாம் நமக்குக்குள் வகுத்துக்கொண்ட கொள்கைகளும் அதன் செயற்பாடுகளும்தான். நமக்கான ஆடை எதுவென்று அன்னிய மதத்தினர் கேற்கின்றபோது நாம் பின்பற்றும் அமைப்புக்கள் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் அதற்கு விளக்கம்கொடுக்க முற்படுகின்றோம்.

தொழுகின்றபோது ஒரு சிலர் தொப்பியுடனும் ஒரு சிலர் தொப்பியில்லாமலும் தொழுவதைக் காண்கின்ற பிற மதத்தவர் எப்படித் தொழுவது சரி என்று கேட்கின்றபோது நமது கொள்கைக்கு ஏற்ப அதற்கு பதில் அளிக்கின்றோம். 

நமது திருமணவிடயங்களை எடுத்துக்கொண்டால் பணம்படைத்தவர்களினதும் அரசியல் பிரமுவர்களினதும் திருமணங்கள் ஒரு விதமாகவுவும் இவ்விரண்டுமில்லாதவர்களின் திருமணங்கள் வேறு விதமாகவும் நடைபெறுவதைக் காணுகின்ற ஏனைய மதத்தினர் எத்திருமணம் சரி என்று கேட்கின்றபோது, அவற்றுக்கும் அவரவர் பின்பற்றுகின்ற கொள்கைகளுக்கு அமைய விடையளிக்கப்படுகிறது.

அது மாத்திரமல்ல, நாம் செய்கின்ற வியாபாரம், நமது நடைத்தைகள் நமது மனப்பாங்குகள் எல்லாமே மாற்று மதத்தினரின் பார்வையில் பிழையாகவே தெரிகிறது. அதற்கு அவர்கள் காரணமல்ல. நாமேதான் காரணம். நமது செயற்பாடுகளே நம்மையும் நாம் பின்பற்றுகின்ற இஸ்லாத்தையும் கேவலப்படுத்துகின்றன. மக்களை நல்வழிப்படுத்துபவர்கள், அரசியல் ரீதியாகத் தலைமை தாங்குபவர்கள் தவறாக நடக்கின்றபோது, அவர்களின் தவறுகள் மட்டும் பேசப்படுவதில்லை. ஆவர்சார்ந்த ஒட்டுமொத்த சமூகமே தவறாகப் பேசப்படுகிறது. தவறைத் தவறு என்று கூறுகின்றபோது, தவறென்று சொல்பவரே தவறாகப் புரியப்படுகிறார். இதுதான் நமது சமூகத்தின் இன்றை சூழ்நிலையாக அமைந்துவிட்டது. இதன் காரணங்களினாலேயே இன்று நாம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு கூறுவது பிழையென்று பலருக்குப் புரிந்தாலும் சற்று ஆழமாக சிந்தணைகளைச் செலுத்திப் பார்பார்களேயானால் உண்மை புரியும்.

அதுமாத்திரமல்ல, அவரவர் கொள்;கைக்கேற்ப மத்ரஸாக்களை உருவாக்கி அந்ததக் கொள்கைகளினூடாக மாணவர்கள் வழிநடத்தப்படுவதன் மூலம்  அந்தக்கொள்கைகளைக் கற்றுக்கொண்டவர்களாக அவர்கள்  மத்ரஸாக்களை விட்டு வெளியேறுகின்றனர். இதனால் அவர்கள் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற ரீதியில் செயற்படுகின்றனர். இவற்றுகெல்லாம் யார் காரணம?; குர்ஆண் ஒன்றாகவம் இஸ்லாம் ஒன்றாகவும் இருக்கின்றபோது யாராரோ உருவாக்கிய கொள்கைகளை வைத்துக்கொண்டு, அந்தக் கொள்கைகளின் அடிப்படையில் நாம் வாழ முற்பட்டுவிட்டோம். நாம் கொண்ட கொள்கையே பெரிதென நினைக்கின்றோம். இதனால் மாற்றுக் கொள்கைகொண்டோர்களை மாற்று மதத்தினரிடம் காட்டிக்கொடுக்கின்றோம். இதனடிப்படையில் அவர்கள் நமது ஒவ்வொரு விடயத்திலும் மூக்கை நுழைத்து இன்று நமது இறைமையையும் தனித்துவத்தையும் பொருளாதாரத்தையும் சிதைக்க முற்பட்டுள்ளனர்.

அதுமாத்திரமின்ற,p நம்;மில் பலர் சாதனை புரிந்துவிட்டோம் என்று பத்திரிகைகளில் தங்களை விளப்பரப்படுத்திக்கொள்வதற்காக மாற்று மதத்தவர்களின் வழிபாட்டுத்தளங்களில் நோன்பு திறத்தல,; தொழுகை போன்ற வணக்கங்களைப் புரிகின்றனர். ஆனால் அதுதொடர்பான அடிப்படை விடயங்களை அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதில்லை. அதனால் அவர்கள் பள்ளிவாசல்களில் அவர்களது மத விடயங்களைப் புரிவதற்கு அனுமதி கேட்கின்றனர். நாம் பிழையைச் செய்துவிட்டு அவர்கள் பிழை செய்ய முற்படுகின்றபோது அதை மாத்திரம் பிழையென்று குறிப்பிடுவதில் என்ன நியாhயம் இருக்கிறது. மொழிப் புலமை உள்ளவர்கள் அருள்மறையாம் தித்;திக்கும் திருக்குர்ஆணை சிங்கள மொழியில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளனர். ஆனால், குர்ஆனின் 'தப்ஸீh' விளக்கவுரையும் அவர்களிடம் மொழிபெயர்த்துக் கொடுத்தார்களா? அவ்வாறு கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் குர்ஆனின் நேரடிக் கருத்துக்களை மாத்திரம் வைத்துக்கொண்டு குர்ஆனைப் பற்றி பேசியிருக்க மாட்டார்கள்.  

இது ஒருபுறமிருக்க, நமது அரசியல் தலைமைகள் அரசியலுக்காக  பிரிந்து செயற்படுகின்றனர். நமது மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றபோது, அதற்காக யார் குரல்கொடுப்பது? யார் குரல் கொடுக்க வேண்டும?;, என்று சிந்திப்பவர்களாக இருக்கிறார்களே தவிர, நம்மை நம்பி நமக்கு வாக்களித்த மக்களது உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களாக இல்லை. எங்களது உரிமைகளைப் பெற்றுத் தாருங்கள் என்று இன்று வாக்களித்த மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அந்தக் குரல்கள் அரசியல் தலைமைகளின் செவிகளில் விழாததன் காரணமாக அரசியல் தலைமைகளை நம்பாது, அரசியல் தலைமைகளுக்கெதிராக வாக்களித்த மக்கள் தங்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்த முற்பட்டுள்ளனர். வேளிப்படுத்தியும் வருகின்றனர். அரசியல் முரண்பாடுகள் நம்மை பிரித்து வைத்துவிட்டன. அதனால் நமது அரசியல் பலம் உடைந்து சிதறிவிட்டது. இவற்றினால் நமது அரசியல் உரிமைக்குரல்கள் ஊமையாகி விட்டன.

நாம் தவ்வா கொள்கைகள் ரீதியாகவும் அரசியல் கட்சி ரீதியாகவும் பிரிந்து நின்று ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்துக்கொண்டு பலவீனப்பட்டு காட்சி கொடுப்பதே நம்மைச் சீண்டிப்பார்க்கும் சக்திகளுக்கு பலமாக அமைந்துவிட்டது. நமது பலவீனத்தை அவர்கள் பலமாக்கிக்கொண்டு செயற்படுகின்றனர்.

இஸ்லாத்தையும் இஸ்லாமியக் கடமைகளையும் முஸ்லிம்களையும் எதிர்ப்பதன் மூலமே உலகிலும் சரி உள்நாட்டிலும் சரி விரைவாகப் பிரபல்யம் அடைந்து விட முடியும். இஸ்லாம் விரோத நாடுகளினதும் நாட்டுத் தலைவர்களினதும் ஆதரவையும் நன்கொடைகளையும், பாதுகாப்பையும் பெற்றிட முடியும். எல்லா ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுக்கும். முஸ்லிம் விரோத நடவடிக்கைகளைத் தொடர் சங்கிலியாக மேற்கொள்கின்றபோது முஸ்லிம்கள் உணர்ச்சிவசப்பட்டு கொதித்தெழுவார்கள. இதன் மூலம் முஸ்லிம்கள் சகிப்புத் தன்மையற்றவர்கள், விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் மனோபக்குவம் அற்றவர்கள், வெறிபிடித்தவர்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதக் கூட்டம் என்றென்னாலம் உலக அரங்கிலும் தேசிய மட்டத்திலும் புடம்போட்டுக்காட்ட முடியும். அதன் மூலம் நமது இலக்குகளை இலகுவில் அடைந்துகொள்ள முடியும் இவ்வாறு பல எதிர்காலத்திட்டங்களுடனேயே இந்த பேரினவாத சக்திகள் தங்களால் முடிந்த சேட்டைகளைப் புரிந்து வருகின்றன. அதற்காக ஒரு சிலரின் ஆசிர்வாதங்களையும் பெற்றிருக்கின்றன. 

தம்புள்ளைப் பள்ளிவாசல் உடைப்புத் தொடர்க்கம்  பெபிலியான பெஷன்பக் களஞ்சியசாலைத் தகர்ப்பு வரை இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்தும் மேற்படி நிகழச்சி நிரலின் கீழ் மேற்கொள்ளப்பட்டவைகளாகவே கருத வேண்டும்.

பாலியல் துஷ்பிரயோகங்கள், களவு, வழிப்பறிக்கொள்கை கொலை, விபச்சாரம், குடி, சூது, லஞ்சம், ஊழல்மோசடி, போன்ற மனிதனின் அமைதி வாழ்கைக்கு குந்தகத்தை விளைவித்துக்கொண்டிருக்கும் பஞ்சமா பாதகச் செயல்கள் தலைவிரித்து ஆடுகின்றது. அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாதவர்கள்  பாவங்களை ஒழிக்க வேண்டும். அவை இடம்பெறாமால் தடுக்க வேண்டும். சகோதரத்துவத்துடனும் சமத்துவத்துடனும் வாழ வேண்டும் என்று போதிக்கும் பௌத்த மத்தைப் பின்பற்றுகின்ற, அவற்றைப் போதிக்கின்ற மத போதகர்கள் சிலர் மதத்தின் பெயரால் ஒரு இனத்துக்கெதிராக சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.இவர்களின் இத்தகைய செயற்பாடுகள் பல்வேறு சக்திகளின் பின்னிணியில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளாகும்.

 இந்நடவடிக்கைகளுக்கு முகம்கொடுத்து இந்நாட்டில் நமது இருப்பைப் பாதுகாக்க வேண்டும். நமது எதிர்கால சந்ததியினர் தனித்துவத்துடனும் இறைமையுடனனும் சுய மரியாதையுடனும் வாழ வேண்டுமாயின் நாம் முதலில் ஒற்றுமைப்பட வேண்டும். நமக்குள் நாம் வகுத்துக்கொண்ட கொள்கைகளின் மூலம் அமைப்புக்களாகப் பிரிந்து செயற்படுவதைத் தவிர்த்து ஓரே இறைவன் ஒரே நபி ஒரே குர்ஆன் ஒரே கிப்லா என்றடிப்படையில்  தவ்வா அமைப்புக்கள் ஒன்றுபட வேண்டும். கட்சிக்காக மக்களல்ல மக்களுக்காக கட்சி  என்ற நிலைக்கு அரசியல் தலைமைகள் மாற முன் வர வேண்டும். அதன் மூலம் அரசியல் வேற்றுமைகளை மறந்து,  மக்கள் அளித்த அரசியல் அதிகாரங்களினூடாக மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க ஒரே குறிக்கோளுடன் செயற்பட ஒற்றுமைப்படுவது அவசியமாகும்

அற்ப கொள்கைகளுக்காக, சொற்ப அரசியல் இலாபங்களுக்காக கொள்கைவாதிகளாகவும் கூஜாதூக்கிகளாகவும் கோடாரிக் காம்புகளாகவும் காட்டிக்கொடுக்கும் கூட்டமாகவும் செயற்படுவதன் மூலம் நாம் எதையும் அடைந்துவிட முடியாது. அவ்வாறு செயற்பட்டு எதையடைந்தாலும் அவை நிரந்தரமாக நம்மிடம் இருந்துவிடாது.   அத்தகைய செயற்பாடுகள் நமது எதிர்கால சந்ததியினரை இந்நாட்டில் அடிமைகளாகவே வாழச் செய்யும். எதிர்கால சந்ததிகள் நம்மை சமூகத் துரோகிகள் என்று பட்டம் சூட்டுவதைத் தவிர்க்க வேண்டுமாயின்; தவ்வா அமைப்புக்களும் அரசியல் தலைமைகளும் ஒன்றுபட்டு செயற்படுவது அவசியமும்  இன்றியமையாததுமாகும். இதுவே நமது சமூகத்தின் இன்றைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. நாம் தவ்வா அமைப்புக்கள் அடிப்படையிலும் அரசியல் கட்சி அடிப்படையிலும் பிரிந்து நின்று எதையும் சாதித்துவிட முடியாது.  நம்மை அடிமைப்படுத்த நிiனைக்கும் பேரினவாத சக்திகளின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முகம்கொடுக்க வேண்டுமாயின் நாம் ஒற்றுமைப்படுவது அவசியம். ஓற்றுமையினூடாகவும் இறைவன் உதவியினுடாகவும் நம்மை நாம் காத்துக்கொள்ள செயற்படுவோம். நமது ஒவ்வொரு முற்சியிலும் அல்லாஹ் நமக்கு உதவியாளனாக இருப்பானாக, 

  


No comments

Powered by Blogger.