இலங்கைக்கு ஏமாற்றம்
மன்னார் கடற்படுக்கையில், கெய்ன் லங்கா நிறுவனம் தோண்டிய நான்காவது கிணற்றிலும், எண்ணெய் வளமோ, எரிவாயு வளமோ இல்லாதது, இலங்கைக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கெய்ன் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ன் லங்கா நிறுவனம், முதற்கட்டமாக, மன்னார் கடற்படுகையில், மூன்று இடங்களில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டியது. இதையடுத்து இரண்டாவது கட்டமாக கடந்த மாதம், நான்காவது கிணற்றை துளையிடும் பணிகளை மேற்கொண்டிருந்தது.
எண்ணெய் வளம் ஏதுமில்லாததால், அதைக் கைவிட முடிவு செய்துள்ளதாக கெய்ன் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்ட துணையிடும் பணிகளின் போது, இரண்டு கிணறுகளில் எரிவாயு வளம் இருப்பது கண்டறியப்பட்டது.
எனினும் மூன்றாவதாகத் துளையிடப்பட்ட கிணற்றில், எந்த எரிபொருள் வளமும் இருப்பது உறுதி செய்யப்படாததால் அது மூடப்பட்டது. தற்போது நான்காவது கிணறும் எந்த எரிபொருள் வளமும் இன்றி கைவிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம், மன்னார் கடற்படுகையில் எஞ்சியுள்ள 14 எரிபொருள் வளம்மிக்க துண்டங்களை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், நான்காவது கிணறும் காலை வாரியது இலங்கைக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், இலங்கை எண்ணெய் வளத் துண்டப்பகுதிகனை ஏலம் எடுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் பின்னடிக்கும் நிலை ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. வியட்னாம், ரஸ்யா. மலேசியா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கையில் எண்ணெய் அகழ்வு மேற்கொள்ள விருப்பம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரபு நாடுகளில் எண்ணையை வாங்கிக்கொண்டே இவ்வளவு மத வாதம் காட்டுறாங்க.....சொந்த நாட்டில் என்னை கிடைத்தால் எவ்வளவு திமிருடன் காட்டுவாங்க....
ReplyDeleteஹராம் எண்ணெய் கிடைக்கவில்லையா?
ReplyDelete