Header Ads



கையடக்க தொலைபேசி மூலம் புகையிரத இருக்கைகளை முன்பதிவு செய்யலாம்.



(ISBAHAN SHARFDEEN)

அடுத்தகிழமை முதல் 5 கரையோர புகையிரத நிலையங்களுக்கு மொபிடல் இலக்கத்தின் மூலம் புகையிரத இருக்கைகளை முன்பதிவு செய்யும் வசதியை வழங்க புகையிரத திணைக்களம் தீரமானித்துள்ளது. 

அதன்படி, கழுத்துறை, அழுத்கமை, ஹிக்கடுவை, காலி மற்றும் மாத்தறை ஆகிய புகையிரத நிலையங்களில் இந்த சேவையை பெற முடியும் என புகையிரத நிலைய வணிக அதிகாரி சிசிர குமார தெரிவிக்கிறார்.

இதுவரை, கொழும்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இச்சேவை வெளிப்பிரதேசங்களுக்கும் வழங்குவதன் மூலம் புகையிரத இருக்கைகளை முன்பதிவு செய்ய கொழும்பிற்கு வந்து பலமணி நேரம் காத்திருக்க அவசியமேற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.