Header Ads



வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடாத்த முயற்சி - பொலிஸ் மா அதிபர்


நாட்டில் மீளவும் குழப்பங்களை ஏற்படுத்தி இனவாதத்தை தூண்டி அதன் மூலம் வர்த்தக மற்றும் மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடாத்தும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் நபர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் உத்தரவிட்டுள்ளார்.

ஏதேனும் ஓர் இடத்தில் இனக்கலவரம் இடம்பெற்றால் உடனடியாக சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்ட குழுக்களினால் தாக்குதல் நடத்தப்படக் கூடிய சில முக்கிய வர்த்தக நிலையங்கள் கட்டிடங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட வகையில் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலைமையை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட வகையில் இன மத முறுகலை ஏற்படுத்த முயற்சிப்போரின் வதந்திகளுக்கு மக்கள் செவிமடுக்க வேண்டியதில்லை. vi


7 comments:

  1. Sir, Is the police carrying out your orders? The basic problem for all these issues are the police in Srilanka has started working for something or favour. Have you questioned those police officers who allowed the Bikku to continue to stone the CCTV camera? What is the point in the asking about your orders if someone is to defuse in the middle?

    ReplyDelete
  2. அந்த சிலர் யாரென்று பொலிஸ் மா அதிபர் அவர்களுக்கு தெரியாது போல .

    ReplyDelete
  3. Very shame sir,
    You should take this action earlier.

    ReplyDelete
  4. அனைவரும் கட்டளைதானிடுகிறார்களே தவிர ஒன்றும் நடக்கவில்லை.
    நடப்பதெல்லாம் முஸ்லிம்களுக்கெதிரான சம்பவங்கள்தான் தவிர வேறில்லை தாக்கத்துக்குள்ளாவதும் முஸ்லிம்கள்தான். ஆனால் முடிவு ஏனொ நாங்கள் முஸ்லிம்கள்தான் குற்றம் செய்ததாக எங்கள் தலையில் முடிகின்றது. நாங்கள் இன்னும் பொறுமையாகத்தான் இருக்கின்றோம். காரணம் பொறுமையைக்கொண்டும் தொழுகைகயைக்கொண்டும் இறைவனிடம் கேட்கும் படி இறைவன் எங்களுக்குக் கற்றுத்தந்துள்ளான் ஒருபோதும் நாங்கள் மார்க்கத்திலிருந்து ஒருதுளிகூட இறங்கமாட்டோம். இன்ஸா அல்லாஹ் பார்க்கின்றோம் இலங்கை அரசாங்கம் என்ன முடிவெடுக்கப்போகின்றது எம்பதை.

    ReplyDelete
  5. "Kudikaran Pechchi vidinja pochchi"

    ReplyDelete
  6. நாட்டுல நெறையப் பேர் கோமால தான் இருக்காங்களோ! அடிக்கடி சுய நினைவுக்கு வந்திட்டு வந்திட்டு போறாங்க.

    ReplyDelete
  7. Dear IGP, don't you know that culprits ..? and who was behind the Fashion Bug attack ...?
    now all the people not only in Srilnka and around the world well know as the Srilanka police working for BBS and not for the department.

    ReplyDelete

Powered by Blogger.