மாடு அறுக்கும் விவகாரம் - கோட்டா தலையிட்டார்
கொழும்பு, தெமட்டகொடையிலுள்ள மாடு அறுக்கும் தொழுவம், சட்டவிரோதமானது என்றும் அதனை உடனடியாக மூடுமாறும் பொது பல சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு இன்று 01-03-2013 எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.
இந்த விவகாரத்தை உடனடியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸவுக்கு முஸ்லிம் அமைச்சர்கள் அறியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அங்கு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கொழும்பு மாநகர சபை சுகாதார பணியாளர்கள் விரைந்து குறித்த மாடு அறுக்கும் தொழுவம் சட்டரீதியானது என உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த இந்த விவகாரத்தை முஸ்லிம் அமைச்சர்கள் உடனடியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடைய கவனத்திற்கு கொண்டுவந்தமையும், அவர் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கிய உத்தரவும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாம ல்தெமட்டகொடை மாடு அறுக்கும் தொழுவம் பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது.

well-done
ReplyDeleteVERY GOOD
ReplyDeleteபிரச்சினை படித்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
ReplyDeleteedukkappadum
ReplyDeletenot wel don and very good
ReplyDeleteis it possible to call gotta every day?
suppose if he go out of the country for a week what will happened?
think wisely