முஸ்லிம் எதிர்ப்புக்காக விருது பெரும் புத்த துறவி (வீடியோ)
மியன்மாரில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் செய்து வரும் சர்ச்சைக்குரிய பௌத துறவி விராது சென்ற ஞாயிற்றுக் கிழமை மத சுதந்திரத்துக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார் என ரோஹிஞ்சிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பேரினவாதம் பேசி திரிந்த இவர் முஸ்லிம்கள் மீது கடும் விரோத போக்கு உடையவராக இனம் காணப்பட்டிருந்த அதேவேளை இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பல்வேறு பிரச்சாரங்களை தலைமை தாங்கி வழி நடாத்தியிருந்தமை மற்றும் இன மோதல்களை தூண்டி விட்டத்தின் பேரில் 2003 ம் ஆண்டு மியன்மார் அரசு இவரை சிறை வைத்திருந்தமையும் குறிப்பிடத் தக்கது.
ஐக்கிய இராஜ்யத்தில் அமைந்திருக்கும் பௌத்த துறவிகளின் மடத்தின் தலைவர் துறவி சாசனா ரம்சியே இவருக்கான இந்த விருதை வழங்கி வைத்துள்ளார்.
ரோஹிஞ்சிய முஸ்லிம்களை கலர் என பெயரிட்டு (அவர்களை இழிவு படுத்துவதற்காக பயன் படுத்தும் சொல்) அவர்களை விரட்டியடிப்பதற்கான அழைப்பை விடுத்து பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ள புத்த துறவியே வீராது, இவர் பொய்யான தகவல்களை பரப்பி 330க்கும் மேற்பட்ட இனவாதிகளைத் தூண்டி கடந்த வாரம் ரான்கூன் நகரில் ஒரு மத்ரசா மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான பல கடைகளை தாக்கி அழித்திருந்தமை கவனத்திற் கொள்ளத் தக்கதாகும்.
எனினும் தலைவர் சாசனா ராம்சி இவரின் போக்கை நியாயப் படுத்தி ஆசி வழங்கியுள்ளமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
http://www.alukah.net/World_Muslims/0/51152/

எமது சமூகம் முஸ்லிம்கள் என்றால் வெறும் அரபு தேசத்தை மட்டுமே நினத்துகொண்டுள்ளது. மியன்மாரில் 1980 காலப்பகுதியில் முஸ்லிம்களது குடியுரிமை பறிக்கப்பட்டது, சுதந்திர நாடான செச்னியா இன்று மற்றானால் ஆட்சிசெய்யப்படுகிறது , இந்துநேசியா வெகு சீக்கிரமே எமது கையை விட்டு செல்லும் அபாயம் உள்ளது, நாம் எமது எல்லா கவனங்களையும் உலக முஸ்லிம் சனத்திகையில் வெறும் 20% உள்ள அரபு தேசத்தில் மட்டும் செலுத்தி ஏனைய முஸ்லிம்களை மறந்துவிட்டோம்,
ReplyDelete