Header Ads



பொதுபல சேனாவுக்கு விடையளிக்கும் முஸ்லிம்களின் நிகழ்வு நிறுத்தப்பட்டது


(இ. அம்மார்)

அக்குரணையில்  ஒரு அமைப்பினர்  கடந்த 26-03-2013 அன்று 90.1 எப். எம் வரிசையில் கேட்கத் தவறாதீர்கள் பொது பல சேனாவுக்கு மறுப்பு- வரிக்கு வரி பதில் -என்ற வாசகத்துடன் அதில் வாள் சின்னத்தையும்  போட்டு அக்குரணையில் எட்டாம் கட்டையில் சுரொட்டியொட்டிகள் பல ஒட்டப்பட்டிருந்தன. இதனைக் கண்ட அப்பிரதேச சிங்கள மக்கள்  பௌத்த தேரர்களுக்கு அறிவித்தல்  விடுத்ததை அடுத்து பௌத்த தேதரர்கள் உடன் அலவத்தக் கொட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து அந்நிகழ்வு பொலிஸாரின்  தலையிட்டினால்  தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன் அக்குரணை ஜம்மியதுல் உலமா சபைக்கு கிடைத்த தகவலை அடுத்து குறிப்பிட்ட அமைப்புக்கு தற்போது இதனைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட போதும் அவர்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு  வர வில்லை. அவர்கள் திட்டமிட்டடி  அந்த நிகழ்வை ஆரம்பித்த போது அலவத்துக் கொடை பொலிஸாரின்  தலையீட்டியினால்  தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது.  பொலிஸார்  அவர்களை  வரவழைத்து விசாரணை மேற் கொண்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.



5 comments:

  1. alawathugoda poice arrest them still they are in custudy-also above agri with jammiyathul ulama of akurana-

    ReplyDelete
  2. தமிழில் ஒரு பழமொழி உண்டு. மாட்டுக்கு மாடு சொன்னால் செய்யாது, மணிகட்டிய மாடு சொன்னால்தான் கேட்கும் என்பார்கள். இப்போது தூக்கம் வந்திருக்குமே குறித்த அமைப்பினர்க்கு!

    ReplyDelete
  3. நிதானம் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  4. http://www.jaffnamuslim.com/2013/04/blog-post_9169.html#comment-form

    ReplyDelete
  5. அவசரக் குடுக்கைகள் திக்கித்திக்கி பேசுவதும் ஆந்தை முழி முழிப்பதுவும்
    இந்த தொ............ஜமாத்தினரின் பழக்கம்,வழக்கம்.

    ReplyDelete

Powered by Blogger.