Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளை சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணையுமாறு நெருக்கடி


சிறிய முஸ்லிம் கட்சிகள் அக்கட்சிகளை கலைத்துவிட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களிலிருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது. இதனை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் உறுதிப்படுத்தினார்.

இதுவும் ஒரு பேரினவாத சிந்தனையே என்றும், எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் பேரம் பேசும் ஆற்றலை முடக்குவது அதன் நோக்கமெனவும் அந்த எம்.பி. சுட்டிக்காட்டினார்.

சிறுபான்மை கட்சிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கேட்டபய ராஜபக்ஸ, பொதுபல சேனா மற்றும் ஜாதிக்கஹெல உறுமய கட்சிகள் ஏற்கனவே தமது விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தன. 

இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கு இந்த அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது. இதுதொடர்பில் முஸ்லிம் அமைச்சரொருவர் தமது கவலையை வெளிப்படுத்தியதாகவும் மேலும் அறியமுடிகிறது.

சிறிலங்கா சுதந்திரக கட்சியின் தேசிய அமைப்பாளராக அமைச்சர் பஷில் ராஜபக்ஸ அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தகக்து.

10 comments:

  1. குட்ட குட்ட குனிபவன் மடையன்

    ReplyDelete
  2. யாழ் இணையமே! எங்களை கொமடி, கீமடி பண்ணலையே?

    நான் இவ்வளவு நாளாக இவர்கள் சுதந்திர கட்சியை சேர்ந்தவர்கள் சும்மா பார்டைமுக்கு ( பகுதி நேர ) முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன் .

    இவர்கள் இணைந்தாலென்ன பிரிந்தாலென்ன ?

    நீங்க இணைந்தாலும் பரவாயில்லை தயவு செய்து சமூகத்துக்காக பிரிந்து வந்து விடாதீர்கள். உங்களை நம்பி ஏமாந்தது போதும்.

    நீங்கள் சுதந்திர கட்சியில் இணைந்தாலும் முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்தது போல பொது பல சேனா, சிஹல உறுமய மற்றும் தேசிய முன்னணி என்பவற்றை காட்டிக் கொடுக்காதீர்கள்.
    ரொம்ப புண்ணியம் கிடைக்கும்.

    ReplyDelete
  3. கட்சி மாறத் தேவல்ல, அவுகள மதம் மாறச் சொல்லுங்கோ.

    ReplyDelete
  4. எல்லாரும் சேர்ந்து நமக்கு ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்க போல தான் இருக்கு!
    சகோதரர்களே ஒரே வழி அல்லாஹ்விடம் உதவி தேடுவது,பிரார்த்திப்பது!

    ReplyDelete
  5. இந்த அரசு இதுவும் செய்யும் இன்னமும் செய்யும் அதிலும் எனக்கு அமைச்சு வேண்டும் என்று முந்திக்கொண்டு சமூகத்தை காட்டிக்கொடுக்கும் முனாபிக்குகள்தான் ஒட்டிக்கொண்டு ஓடுவார்கள் இதில் இணைவது யார் என்பது தெரிந்தால் அவர்களை இலகுவாக இனம்காண முடியும் எவ்வளவு பெரிய முனாபிக்குகள் என்று. இப்போதாவது இந்த அரசியல் வாதிகளுக்கு புரிகிறதா ஒற்றுமையின் பலமும் பிரிவின் அவலமும் றஊப் ஹகீம் இதன்பின் உமது வறட்டு கௌவரவத்தை தூக்கிவீசிவிட்டு அல்லாஹ்விடம் மன்னிப்புத்தேடி இளம் சந்ததிக்கு வழிவிட்டு மறுமை சிந்தனையில் வாழ பழகிக்கொள்ளவும் மறைந்த தலைவர் அஷ்றபின் ஒரு மணித்தியாள சாதனையளவு இவ்வளவு காலமும் சாதிக்கவில்லை நீர் கிளிச்சது இருந்ததை பிரிக்க வழிவகுத்து உன் வாசிக்கு வக்காலத்து வாங்கியது நீங்கள் அமைச்சுப்பதவிகள் எடுத்து இந்த சமூகத்துக்கு இதுவரைக்கும் செய்த நல்ல காரியம் எதையாவது குறிப்பிட்டு சொல்லமுடியுமா சிந்தித்தால் வெட்கமில்லியா பேசமுடியாத சேவை செய்யமுடியாத அமைச்சுக்காகவா நீர் சமூகத்தை அடகுவைத்தீர் இப்படி ஒரு அமைச்சை எடுத்துத்தான் கட்சியை பாதுகாக்கவேண்டும் என்றால் அது அழிவது மேல் அல்லாஹ்வை அதிகம் பயந்து கொள்ளவும் தலைமைப்பொறுப்பு அமானிதம் அதயும் பயந்து தயவு செய்து ஒதுங்கி வழிவிடவும்

    ReplyDelete
  6. சேரவேண்டியது தானே -யார் வேண்டாம் என்றது

    ReplyDelete
  7. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
    அஸ்ஸலாமு அலைக்கும்
    சிறிலங்கா சுதந்திர கட்சி வளர்ச்சிக்குஆரம்பகால முஸ்லிம்கள் கணிசமான பங்களிப்பு செய்துள்ளனர் .எனவே எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் பகுதி பகுதியாக பிரிந்து கிடப்பதை இப்படியாவது ஒற்றுமையாக இருந்தால் பரவாயில்லை .

    ReplyDelete
  8. உப்பை தின்றவன் தண்ணி குடிக்கத்தான் வேண்டும்

    ReplyDelete
  9. வற்புறுதாமலே போய் சேரும் இவர்கள் !!! வற்புரிதினால் என்ன செய்வார்கள்? ஐயோ பாவம் ! இக்கட்சியோடு சேராமல் கௌரவமாக இருக்க இவர்கள் என்ன ஷஹீத் சதாம்உசேனா ? அல்லது நம் நாட்டு சிங்கம் அசாத் சாலிய ?

    ReplyDelete
  10. கரும்பு திண்ண கூலியா ? ஜோக்கடிக்க வேணாம் அழுக வருது ... இவனுக இப்ப மட்டும் எங்க இருக்கானுகளாம் ? எங்கட சமூகத்துல கோடரிக் காம்புகளே இந்த முஸ்லிம் பெயர்தாங்கி கட்சிகள் தான் ..

    ReplyDelete

Powered by Blogger.