(உ/த) பரீட்சையில் A சித்தி பெற்ற மாணவர்களுக்கான வழிகாட்டலும், கௌரவிப்பும்
(சுலைமான் றாபி)
கடந்த க.பொ.த (உ/த) பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் கணக்கீட்டில் A சித்தி பெற்ற சுமார் 82மாணவர்களுக்கு இன்று (11.03.2013) திங்கட்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் கௌரவம் அளிக்கப்பட்டது.
இதில் விஷேட அம்சமாக வர்த்தகப் பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதலாவது தரத்தினை (1st Rank) பெற்ற MHM சாதிதீன், மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது தரத்தினை பெற்ற MUM றிஷாத் ஆகியோர்களுக்கு ஆசிரியர் ILA சலாம் மற்றும் திரு S துமிலன் ஆகியோர்கள் ILA சலம் - KBBS ஞாபகார்த்த பதக்கத்தினை வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் இவ்வருடம் க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவ, மாணவிகளும் இதில் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.

Post a Comment