Header Ads



ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முஸ்லிம்கள் விடயத்தில் கவனம் செலுத்தும் - அமைச்சர் நிமால்



(மொஹமட் பாயிஸ்)

ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சி  பதுளை மாவட்ட முஸ்லிம் இளைஞர் கிளை அங்குராபண நிகழ்வு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் பதுளை லு.ஆ.ஆ.யு கேட்போர் கூடத்தில் சனி இரவு இடம்பெற்றது. இதன்போது நடப்பாண்டிற்கான புதிய நிர்வாகக் குழு தெரிவு இடம்பெற்றது. 

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இங்கு உரையாற்றும் போது,

முஸ்லிம்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் நீண்ட உறவு இருக்கின்றது, அதற்கமைய எமது கட்சி முஸ்லிம்கள் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தும் அந்த வகையில் நாடாளுமன்றில் பேசப்பட்ட ஹலால் விடயம் தொடர்பாகவும் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கருத்துக்களை தெரிவித்துள்ளேன். எதிர்காலத்தில் பதுளை மாவட்ட முஸ்லிம்களை பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். 

பதுளை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முஸ்லிம் கிளை தலைவராக உவைஸ், செயலாளராக எம். பவுஸ், பொருளாளராக ஜே.எம். காதிர். ஆகியோரும் நிர்வாக குழு உறுப்பினர்கள் 7 பேரும் தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது பதுளை ஊவா மாகாண சபை உறுப்பினர் மானெல் ரத்நாயக்க, அஜித் லியனகே, மற்றும் மாநகர முதல்வர் உபாலி நிஸ்ஸங்க குணசேகர, நகர சபை உறுப்பினர் அல்ஹாஜ் மன்சூர் ஆகியோரும் பள்ளிவாசல் நிர்வாகச் சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







1 comment:

  1. அவங்கவங்க சந்தர்ப்பங்களூக்கு ஏற்றாற்போல பேசிவிட்டுபோறாங்க் சுயனலவாதிகள்,

    ReplyDelete

Powered by Blogger.