யாழ்ப்பாணம் முஸ்லிம் பகுதிகளுக்கு நோர்வே தூதுவர் விஜயம் (படங்கள்)
(பா.சிகான்)
யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹிரேட் லோஸன் இன்று 02-03-2013 மாலை 3 மணியளவில் யாழ் முஸ்லீம் பிரதிநிதிகளை முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது தூதுவரிடம் முஸ்லீம்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக யாழ் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.எம்.எம். ரமீஸ் எடுத்து விளக்கினார்.
முஸ்லீம் பகுதியில் கடந்த யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்வையிட்டார். மேலும் யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளன தலைவரினால் தூதுவருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது.இச்சந்திப்பில் முஹம்மதியா பள்ளிவாசல் பிரதம இமாம் மஹ்மூத் பலாஹி, அப்பள்ளிவாசல் பரிபாலன சபை செயலாளர் சியானாஸ் தாஹீர் உட்பட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.







Post a Comment