Header Ads



முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது - ரணில் ஆவேசம்



(ஜே.எம்.ஹபீஸ்)

முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில்  33 சம்பவங்கள் இடம் பெற்ற பின்பும் அரசாங்கம் மௌனம் காக்கிறது.  அரசு இப் பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட மாட்டாது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரனில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அங்கத்தவர்க்ள் சேர்த்து கொள்வதற்காக அக்குறணை நகரில் இன்று 2013 03 02 மாலை இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்க மேலும் உரையாற்றிய எதிர் கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது,

அக்குறணை பிரதேசம் கண்டிய மன்னரால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதாகும். போத்துகேயர்கள் அக்குறணை வழியாக கண்டிக்கு செல்ல முயற்சித்த போது அக்குறணையில் அவர்களை தடுத்துவைத்து தாமதப்படுத்தி கண்டிய மன்னனுக்கு விடயத்தை அறிவித்துள்ளனர். இதன் காரணமாக புத்தரின் புனித தந்தத்தை ஹங்குரங்கெத்த பிரதேசத்துக்கு கொண்டு சென்று பாதுகாத்துக் கொள்ள முடிந்தது.

இன்று முஸ்லிம்களுக்கு எதிராக சில சக்திகள் களத்தில் இறங்கி உள்ளன. ஆரசாங்கம் இதனை பாத்துக் கொண்டு மௌனம் காக்கிறது. நான் இதைப்பற்றி பாராளுமனறத்தில் பேசிய போது என்னை குற்றம் கூறுகின்றனர்.  ஹசன் அலி எம்.பி.பொய் சொல்வதாக கூறுகின்றார்கள் அவர் பொய் சொன்னால் அவருக்கு எதிராக நட்வடிக்கை எடுக்க முடியும். அப்படி எதுவும் செய்யாமல் மக்களை ஏமாற்றுக்ன்றனர்.

ஹலால்  சான்றிதழ் சம்பந்தமாக முஸ்லிம்களுக்கு இடையேயும் ஒத்த கருத்து இல்லை. சிலர் ஹலால் சான்றிதலை உலமா சபை வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். மற்றும் சிலர் அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் இது தேவை இல்லை என்றும் கூறுகின்றனர். எனவே இது ஒரு குறப்பிட்ட குழுவின் பிரச்சினையாக உருமாற்றப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி மேற்கொள்ளும் எதிர்நடவடிக்கைகாரணமாக முழு முஸ்லிம் சமுதாயமும் பாதிக்கப்படுவதை எம்மால் அனுமதிக்க முடியாது.

ஹலால் சான்றிதல் வழங்கும் பிரச்சினை சம்பந்தமாக எழுந்துள்ள பதட்ட நிலைமை சுமூகமாக முடிவுக்க கொண்டு வர அரசுக்கு முடியும். முஸ்லிம்களுக்கு எதிராக அனுராதபுரத்தில் இடம் பெற்ற சம்பவத்தின் போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இப் பிரச்சினை இவ்வளவு தூரம் சென்றிறுக்காது. இருந்த போதும் தற்போது இப் பிரச்சனை கூடிய தூரம் சென்றுள்ளது. அரசு இப் பிரச்சினைக்கு தீர்வு காணது என்பதையே இன் நிலமை எடுத்து காட்டுகிறது. 

எனவே தற்போதைய அரசாங்கத்தை மாற்றாமல் எதுவுமே செய்ய முடியாது. அதற்காகத்தான் கிராம மட்டத்தில் எமது அங்கத்தவர்களை பலப்படுத்தி 2014 ம் ஆண்டில் தேர்தல் ஒன்றை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலம் மட்டுமே இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.






7 comments:

  1. யப்பா கண்ணக் கட்டுது .... ஏன் சார் போய் உங்க யூத நண்பர்களிடம் சொல்லலாமே நிறுத்தச் சொல்லி!! ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுததாம். நாங்க இது வரைக்கும் பாத்தம் இல்ல உங்க முஸ்லிம் பாசத்த... பிரச்சினை தணியும் போது பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு சார்பா பேசுற மாதிரி பிரச்சினைய தூண்டி விட்டேக. இப்போ மீண்டும் குறையுதில்ல..அது தான் மீண்டும் நடிப்பு. நம்ம முஸ்லிம்களும் கொஞ்சமாவது யோசித்த பாடில்லை. இவர் எப்போதாவது முஸ்லிம் களுக்கு சார்பான போக்கில் நடந்த வரலாறுண்டா? " சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழும்" வழக்கத்தை நம் சமூகம் எப்போது விடும்? இவங்க எல்லாரும் சேர்ந்து செய்யும் சதி வலை என்பதை எப்போ புரியப் போறீங்க?

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் இன்று இருக்கும் நிலைமையில்... உங்களது முஸ்லிம்களுக்கான ஆதரவு மிகவும் துணிச்சலானதும், உங்களது வெளிப்படையான தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது.... நீங்கள் ஒரு பொறுப்புவாய்ந்த எதிர்கட்சி தலைவர் என்ற வகையில் இது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரியதொரு தாக்கத்தை நிட்சயம் உருவாக்கும். இதற்காக முஸ்லிம்கள் நிச்சயமாக உங்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.

    ReplyDelete
  3. what he was doing when he was prime minister in 2001

    ReplyDelete
  4. THANKS MR. RANIL BUT THIS POTHU PALA SENA LEAD BY GOVERNMENT SO HOW WE CAN TAKE ACTION AGAINST THAT GROUP, MUSLIM ONLY TRY TO UNDERSTAND THIS ISSUE BUT THEY ARE STILL SPORTING SOME CHEATING MUSLIM POLITICIAN

    ReplyDelete
  5. எமது தலைவர்கள் மௌனம் காக்கும் போது இவராவது பேசுகின்றாரே.

    ReplyDelete
  6. சகோதரர்களே இவர் பேசுகிறார் என்று யோசிப்பதை விடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முஸ்லிம்களை சுத்தம் செய்த இவர், எப்பொழுதும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொழிற்படும் இவர், யுத்த நிறுத்த காலத்தில் கிட்டத்தட்ட 50 முஸ்லிம்களை கிழக்கு மாகாணத்தில் புலிப் பயங்கரவாதிகள் படுகொலை செய்யும் போது இராணுவத்தை பொத்திக் கொண்டு இருக்கச் சொன்ன இவர், யூத கிறிஸ்தவர்களின் கையாளான இவர் ஏன் பேசுகிறார் என்று சிந்திப்பதே இங்கு உசிதம். குருவியின் அளவா நமக்கு அறிவு??? சார்பாக ஒருவர் பேசினால் கண்ணைப் பொத்திக்கொண்டு பின்னால் போகும் முறைமையை மாற்றுங்கள். அறிவுள்ள சமுகமாய் மாறும் போதுதான் வோட்டுக் கேட்கும் போது சமூக உரிமை பேசி விட்டு இப்போ "புது மணமகன் " போல சுகமான உறக்கம் கொள்ளும் கேடுகெட்ட நமது அரசியல் வாதிகளை திருத்த முடியும். பிரச்சினையை நிதானமாக யோசியுங்கள். பிரச்சினையை உயிர்ப் பயத்துடனும், கோழைத்தனமாகவும், விவேகமற்ற முறையிலும் அணுகினால் இவர்களை எல்லாம் நல்லவர்கள் பட்டியலில் சேர்த்துவிடுவோம். இதில் நாம் யோசிக்க மறந்தது இவர் ஜனாதிபதியின் கையாள் என்ற நாடறிந்த உண்மையை....

    ReplyDelete

Powered by Blogger.