முஸ்லிம்களை படுகொலை செய்த கருணா மீது போர்க்குற்ற விசாரணை வேண்டும்
பிரதி அமைச்சரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் இருந்து போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்று நியுயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவு பணிப்பாளர் பிரட் அடம்ஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கருணா விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவராக இருந்தவர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் முரண்பட்டுக் கொண்டு 2003 மார்ச் மாதம் வெளியேறும் வரை புலிகளின் கிழக்கு மாகாண தலைவராக செயற்பட்டவர். விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்த பின்னர்,அரசுப்படைகளுடன் இணைந்து அவர் செயற்பட்டிருந்தார்.
கிழக்கில் அப்போது அவரது படையினர், சிறுவர்களை கடத்தி ஆயுதப்பயிற்சிகளை கொடுத்தனர். வீடுகள், பணியிடங்கள், கோவில்கள், விளையாட்டு மைதானங்கள், வீதிகள், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து பையன்களைக் கடத்திச் சென்றனர். இந்த மீறல்கள் மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் 2007ம் ஆண்டு அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பிறர் மீது குற்றம் சுமத்தி தப்பிக்க நினைக்கிறார் கருணா.
1990ம் ஆண்டு சரணடைந்த 400 தொடக்கம் 600 பேர் வரையான காவல்துறையினரை கருணாவின் தலைமையிலான விடுதலைப் புலிகளின் படைப்பிரிவு, கடுமையாக சித்திரவதை செய்தது. பின்னர், அவர்களில் சிங்கள மற்றும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை பிபிசி-க்கு அளித்த செவ்வி ஒன்றில் கருணா ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும், சம்பவம் நடைபெற்ற போது, தான் அங்கு இருக்கவில்லை என்பதால், அதற்கு பொறுப்பேற்க முடியாது என்று தெரிவித்திருந்தார். சட்ட விதிமுறைகளின்படி, அமைப்பின் கீழ்நிலையில் உள்ளவர்கள் செய்யும் குற்றங்களுக்கு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களும் பொறுப்பேற்க வேண்டும். அந்த வகையில் கருணாவை விசாரிக்க வேண்டும்.
அதேகாலகட்டத்தில் மட்டக்களப்பு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களை அவரது அணியினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
மேலும், வீடுவீடாகச் சென்று பெற்றோர்களை மிரட்டி புலிகள் இயக்கத்துக்கு குழந்தைகளை சேர்த்தது, நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து சிறார்களை கடத்திச் சென்றது, பாடசாலை சிறுவர்களை கடத்திச் சென்று ஆயுதப் பயிற்சி அளித்தது ஆகியன தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக தனக்குள்ள பொறுப்பை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகள் மீது கருணா குற்றச்சாட்டு கூறிவருகிறார்.” என்று தெரிவித்துள்ளார் பிரட் அடம்ஸ்.

Machchan madikittar vaie moodikittar
ReplyDeleteஆம் தெய்வம் நின்று கொல்லும். தமிழின் கோடரிக்காம்பு இவன். கழிவிரக்கமற்ற இனக் கொலைகாரன். இவ்விழியவனோ தமிழினதின் கழிப்பிடம்!
ReplyDeleteகத்தி, கோடரி, வாள், பிக்காசி, போன்ற கொல்லப்பட்டறைப் பொருட்களாலேயே இக்கொடும்பாவி கொடுங்கொலைகள் செய்தான். இவ்வக்கிரனுக்கு, கழிப்பிடமும் ஒன்றுதான் வணங்குமிடமும் ஒன்றுதான். அதனால்தான் பள்ளிவாசலிலும், கோயிலிலும் , தேவாலயத்திலும், கொன்றான்! இன்னும் 21 பௌத்த பிக்குகளையும் அறுத்துக் கொன்றொழித்தான்!
கிழக்கு முழுதும் கிழவி முதல் குழந்தைவரை வகை தொகையின்றி இன அழிப்புச் செய்தான் இக்கொடியவன். கொலைகளையும் கொள்ளைகளையும் சமமாகச் செய்த இழியவன். அணு அணுவாய்க் கொல்லப்படுதல் இக்காட்டேரியும் அனுபவிக்க வேண்டும்!
வரலாற்றில் இவன் கொடுமையும், அழிவும் பதிவு செய்யப்பட வேண்டும். காலா காலத்திற்கும் அது சொல்லப்படவேண்டும்! கருணை அற்ற கயவனுக்கு, இத் தமிழ் முசோலினிக்கு கருணா என்று பெயர் கண்டு தமிழ்மொழி வெட்கித்து தலை குனிகிறது, “கருணை” சொல்லை மீளெடுத்து, வெறி நாயென்றும், வேசி மகனென்றும் பதில் சொற்கள் தருகிறது. அவன் நடு நெற்றியில் இவிடுகுறியிட தமிழ்மொழி வேண்டி நிற்கிறது!
பிரபாகரன் முஸ்லிம்களைத் துரத்தினான், கருவறுக்க எண்ணினான் கடைசியில் அவன் இனத்தையே துரத்தினான், அவர்களைக் கொன்றான்! அவனும் அழிந்தான் – அவன் தேட்டமும் அழிந்தது! அவனோடு சேர்ந்து அவன் ஆட்டமும் அடங்கிற்று! போராட்டமும் முடங்கிற்று!
பிரபாகரன் சுட்டான்! இப்புரளிதரனோ, அவன் தலைவர் ஆசியுடன், வெட்டியும் அறுத்தும் குற்றுயிராக்கி இறந்தது பாதி இறக்காதது பாதி எல்லாம் ஒரு குழியில் புதையுண்டு பரலோகம் போயிற்று! காணாமல் போன பிள்ளை இன்னும் வருமென்று புகைப்படம் வைத்துக்கொண்டு இலவு காத்த தாய்மார்கள் உலகமெலாம் தேடுகிறார்.
இறைவனின் தீர்ப்பு இவன் தலைவனுக்கு வந்திற்று! இவனுக்கான தீர்ப்பு ஊர்ஜிதம் ஆயிற்று!