Header Ads



சவூதி அரேபியாவின் தீர்மானம் - இலங்கை தொழிலாளர்களுக்கு பாதிப்பு எற்படுமா..?


(Vi) சவுதி அரேபியாவில் சிறிய மட்டும் நடுத்தர நிறுவனங்களுகளில் தொழில்புரியம் இலங்கையர் உட்பட ஆசிய நாட்டவர் பலர் தங்களது வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டு அரசாங்கமானது உள்நாட்டில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் முடிவை எடுத்துள்ளமையே இதற்கான காரணமாகும்.

எகிப்து உட்பட மத்திய கிழக்கில் வெடித்த இளைஞர்களின் புரட்சி போன்று தனது நாட்டிலும் ஏற்படுவதைத் தவிர்க்க சவுதி அரசு எச்சரிக்கையாக உள்ளதாகவும் அதன் ஓர் அங்கமாகவே இத்தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சவுதியின் புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல் மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த வருடத்தில் அந்நாட்டின் சனத்தையில் 12.2 % வேலையற்றோர். இது எண்ணிக்கையில் 588,000 பேராகும்.

மற்றைய புள்ளி விபரங்களின்படி அந்நாட்டின் 15 - 25 வயதான இளைஞர்களில் 39%  வேலையற்றோராகும். இதனால் சவுதி அரசாங்கம் அதிரடியான பல முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிறுவனங்களில் குறைந்த பட்சம் எத்தனை உள்நாட்டவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டுமென்ற எண்ணிக்கையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட  நடவடிக்கைகளையும் சவுதி அரசாங்கம் எடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

இதனால் பெருமளவிலான ஆசிய நாட்டவர்கள் குறிப்பாக இந்தியர்கள் பலர் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 comment:

  1. இந்த முடிவு ஒரு வருடக்கு மேலாக அமுலில் இருக்கிறது அதாவது ஒரு நிறுவனத்தில் ஆகக் குறைந்தது 10 விகிதம் சவுதி பிரஜைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டமாகும் அதட்கு குறைந்தவர்கள் இருந்தால் அந்த நிறுவனம் சிவப்பு நிறத்தினால் குறிக்கப்படும் அப்படி என்றால் ஏதாவது நிறுவனம் சிவப்பு நிறத்தில் இருந்தால் அந்த நிறுவனத்துக்கு புதிய விசா வழங்கமாட்டார்கள் அந்த நிறுவனத்தில் வேலை செய்வோருக்கும் இக்காமா புதிப்பிக்க முடியாது அனால் 10 விகிதம் என்பது மிக குறைந்த தொகை இதனால் அதிகமாக பாதிப்பு வராது என்னோட நிர்வாணத்தில் சுமார் ஒரு இலட்சத்துக்கு அதிமான வெளிநாட்டினர் வேலை செய்கின்றனர் ஒரு மாதம் எனது நிறுவனம் சிவப்பு நிறத்தில் இருக்கும் அடுத்த மாதம் பச்சை நிறத்தில் இருக்கும் இதுதான் நான் ஒரு வருடமாக பார்கிறேன் இது தொழிலாளர்களை பாதிக்காது.

    ReplyDelete

Powered by Blogger.