Header Ads



பதுளையில் முஸ்லிம் அமைப்புக்கள் ஏற்பாட்டில் பொது நலபணிகள்



(மொஹமட் பாயிஸ்)

பதுளை மாவட்ட ஐக்கிய முஸ்லிம் வர்த்தக சங்கம் ஊவா மாகாண ஜனாசா நலன்புரி சங்கம் என்பன கூட்டாக ஏற்பாடு செய்த பொதுமக்கள் நலப்பணிகள் சில 13-03-2013 வெளிமடை ஹப்புத்தளை, பொரலன்ந, போகாகும்புர, மிரஹாவத்த பகுதிகளில் இடம்பெற்றது. இதன் போது பல ஆயிர் ரூபா பெறுமதியான நிபுலைசர் இயந்திரங்கள் மேற்படி வைத்தியசாலைகளுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டன. இதன் போது உலமாக்கள், வைத்தியர்கள், மரண விசாரணை அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதித லொகுபண்டார ஆகியோருடன் அரசியல் பிரமுகர்கள் சங்கத்தில் செயலாளர் ரிபாஸ் மொஹிடீன் மற்றும் தலைவர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வின் போது குறித்த வைத்தியசாலைகளில் நலன்புரி சேவைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு எதிர்காலத்தில் இன்னும் பல அன்பளிப்புகள் தனது அமைப்பின் மூல் பெற்றுக் கொடுக்க இருப்பதாக ரிபாஸ் மொஹிடீன் தெரிவிக்கின்றர். 




No comments

Powered by Blogger.