ஹலால் சான்றிதழ் வழங்கும் பந்து அரசாங்கத்தின் பக்கத்தில்
(இன்று வெள்ளிக்கிழமை, முதலாம் திகதி வெளியாகியுள்ள நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் இது)
ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென இதுவரை காலமும் அப்பணியைச் செய்து வந்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள ஹலால் பிரச்சினை ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா 2000ம் ஆண்டிலிருந்து இப்பணியை செய்து வந்தது. இற்றைக்கு இரு மாதங்களுக்கு முன்பு பொதுபல சேனா அமைப்பு ஹலால் தொடர்பான சர்ச்சையை எழுப்பியதையடுத்து நாடளாவிய ரீதியில் இது தொடர்பாக பல்வேறுபட்ட பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
எந்தளவிற்கு என்றால் முஸ்லிம்களுடைய பொருளாதாரத்தை பாதிக்கின்ற அளவிற்கு ஹலால் எதிர்ப்புப் பேராட்டம் தொடராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த பின்னணியில் ஜம்மியத்துல் உலமா தமது பொறுப்பை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
இப்போது பந்து அரசாங்கத்தின் பக்கத்தில் உள்ளது. அரசாங்கம் ஒரு பொறிமுறையை வகுத்தே இந்த ஹலால் சான்றிதழ் வழங்கும் முறையை சீராக மேற்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
உலகின் பல நாடுகளில் அரசாங்கங்களே இந்த நடைமுறையை மேற்கொண்டு வருகின்றன. இலங்கையைப் பொறுத்த வரையில் இலங்கையில் சுமார் 10சதவீதமாக வாழும் முஸ்லிம்களுக்கு ஹலால் சான்றிதழுடனான பொருட்களை வழங்குவது அரசாங்கத்தின் கடமை என்றே குறிப்பிடலாம். இது தவிர, இலங்கையிலிருந்து பெருந்தொகையான உற்பத்திப் பொருட்கள் மத்திய கிழக்கு உட்பட்ட இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஏற்றுமதிகளுக்கு ஹலால் சான்றிதழ் மிக முக்கியமானது. ஹலால் சான்றிதழ் இல்லாவிட்டால் நிச்சயமாக ஏற்றுமதி பாதிக்கப்படலாம். இந்தப் பின்னணியில் அரசாங்கத்தின் கையில் இப்போது மிகப் பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஹலால் தொடர்பாக இந்த நாட்டு பெரும்பான்மை மக்கள் மத்தியில் மிகத் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன. இறைவனுக்காக படைக்கப்பட்டவையே ஹலால் என்று கூறப்படுகின்றது. இதில் எவ்வித உண்மையுமில்லை. என்றாலும் இந்த உண்மையை தெளிவாக சொல்வதற்கு முஸ்லிம் தரப்பால் முடியாதிருக்கின்றது. காரணம் முஸ்லிம் தரப்பின் கைகளில் ஊடகங்கள் இல்லாமையே. ஏனைய ஊடகங்களும் இந்த விடயத்தில் முழுமையாக நடுநிலையாக செயற்படுகின்றதா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
கடந்த புதனன்று தனியார் வானொலி ஒன்றில் நடத்திய ஹலால் பற்றிய நிகழ்ச்சியில் சிங்கள, தமிழ் புத்தாண்டின் போது வழங்கப்படும் பாற்சோற்றை முஸ்லிம்களால் உண்ண முடியாது என்ற ஒரு தப்பான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லாதிருந்தபோதும் பாமர மக்கள் இவற்றை நம்பி விடுவார்கள். எனவே அரசாங்கத்துக்கு இந்த ஹலால் பற்றிய உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூறும் பொறுப்பு உள்ளது.
ஹலால் தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்ற அமைச்சரவை குழு நடத்திய இரு கூட்டங்களில் ஹலால் தொடர்ந்து இருக்க வேண்டுமென்ற கருத்தையே வெளியிட்டுள்ளது. இதனை எதிர்க்கின்ற பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு ஹலால் உண்ணும் உரிமை இருக்க வேண்டும் என்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ஹலால் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றன.
உலகின் ஏழு பௌத்த நாடுகளில் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறை அமுலில் உள்ளது. இவை பற்றி பெரும்பான்மை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்பணியை அரசாங்கத்தின் மூலம் மட்டுமே செய்ய முடியும். அரசாங்கம் இந்த விடயத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்து ஹலால் தொடர்பாக ஒரு உறுதியான முடிவை எடுக்க வேண்டும்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் ஹலால் பிரிவில் பணி புரிந்த ஊழியர்களை உள்வாங்கி முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் மற்றும் அரசாங்க தரப்பிரினரையும் இணைத்து ஒரு ஹலால் அதிகார சபையை உருவாக்கி இப்பணிகளை முன்னெடுக்கச் செய்ய முடியும்.
இந்த உலகில் பலமான ஒரு வர்த்தகத் துறையாக ஹலால் வர்த்தகம் வளர்ச்சி கண்டு வருகிறது. பௌத்த நாடான தாய்லாந்தில் ஹலால் நடைமுறை நாட்டின் பிரதமரின் நேரடி கண்காணிப்பிலே மேற்கொள்ளப்படுகின்றது. உலகின் மிகப் பெரிய ஹலால் ஆய்வுகூடம் தாய்லாந்திலே இருக்கின்றது. இம்மாத இறுதியில் தாய்லாந்தில் ஹலால் தொடர்பாக நடைபெறும் ஆய்வு மகாநாட்டில் கூட இலங்கைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஹலால் தொடர்பான பிரச்சினையை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கைவிடுவதற்கு பிரதான காரணம் இந்த நாட்டில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான சக வாழ்வை பாதிக்கும் ஒரு செயலாக ஹலால் எதிர்ப்பு பிரச்சாரம் இருந்ததாக அதன் தலைவர் அஷ்ஷேக் ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.
இரு சமூகங்களதும் சக வாழ்வு முக்கியம் என கருதி ஜம்மியத்துல் உலமா தம் பொறுப்பை அரசாங்கத்துக்கு ஒப்படைத்துள்ளது. அரசாங்கம் மிக விரைவில் ஒரு தீர்வை முன் வைத்து நாளாந்தம் எரிந்து கொண்டிருக்கும் இந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென இதுவரை காலமும் அப்பணியைச் செய்து வந்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள ஹலால் பிரச்சினை ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா 2000ம் ஆண்டிலிருந்து இப்பணியை செய்து வந்தது. இற்றைக்கு இரு மாதங்களுக்கு முன்பு பொதுபல சேனா அமைப்பு ஹலால் தொடர்பான சர்ச்சையை எழுப்பியதையடுத்து நாடளாவிய ரீதியில் இது தொடர்பாக பல்வேறுபட்ட பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
எந்தளவிற்கு என்றால் முஸ்லிம்களுடைய பொருளாதாரத்தை பாதிக்கின்ற அளவிற்கு ஹலால் எதிர்ப்புப் பேராட்டம் தொடராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த பின்னணியில் ஜம்மியத்துல் உலமா தமது பொறுப்பை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
இப்போது பந்து அரசாங்கத்தின் பக்கத்தில் உள்ளது. அரசாங்கம் ஒரு பொறிமுறையை வகுத்தே இந்த ஹலால் சான்றிதழ் வழங்கும் முறையை சீராக மேற்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
உலகின் பல நாடுகளில் அரசாங்கங்களே இந்த நடைமுறையை மேற்கொண்டு வருகின்றன. இலங்கையைப் பொறுத்த வரையில் இலங்கையில் சுமார் 10 சதவீதமாக வாழும் முஸ்லிம்களுக்கு ஹலால் சான்றிதழுடனான பொருட்களை வழங்குவது அரசாங்கத்தின் கடமை என்றே குறிப்பிடலாம். இது தவிர, இலங்கையிலிருந்து பெருந்தொகையான உற்பத்திப் பொருட்கள் மத்திய கிழக்கு உட்பட்ட இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஏற்றுமதிகளுக்கு ஹலால் சான்றிதழ் மிக முக்கியமானது. ஹலால் சான்றிதழ் இல்லாவிட்டால் நிச்சயமாக ஏற்றுமதி பாதிக்கப்படலாம். இந்தப் பின்னணியில் அரசாங்கத்தின் கையில் இப்போது மிகப் பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது.

Post a Comment