Header Ads



''ஹலால்'' - ஸ்ரீ சம்புத்தவ ஜயந்தி முதல் ரன்முத்து வரை..!


(அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அல்-ஹலீமி
இணைப்பாளா: வெளியீட்டுக்குழு,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா)

திடீரென எமது சமூகத்தைக் காவிக்கொண்ட இனத் துவேசம் முஸ்லிம்களின் சின்னமான ஹலாலில் இருந்தே ஆரம்பமானது. ஆனால் உண்மையிலேயே இது ஹலால் பிரச்சனையல்ல. மாறாக ஏற்கனவே திட்டமிடப்பட் படி இந்த சதிகாரர்கள் ஹலாலை ஒரு துரும்பாக பாவித்தார்கள்.

ஏன் ஹலாலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்?

திட்டமிடப்பட்ட முஸ்லிம்களுககு எதிரான பல்வேறுபட்ட சதிமுயற்சிகளின் ஆரம்பத்தை இந்த பௌத தீவிரவாத அமைப்பு சிறுசிறு நிகழ்வுகளாக எப்படியெல்லாம் ஆரம்பிகக் முடியுமோ அப்படியெல்லாம் ஆரம்பித்னர். மஸ்ஜித்களையே செயற்திட்டத்தின் ஆரம்பமாக எடுத்துக் கொண்டனர். தம்புள்ளை  முதல் தெஹிவளை வரையிலான சுமார் 10 க்கும் மேற்பட்ட மஸ்ஜித்கள் தாக்கப்பட்டன. இவைகளிலும் முஸ்லிம்கள் சானக்கியமாக நடந்து கொண்டதால் அவர்களால் எதிர்பார்க்கப்பட்ட பலன்கள் கிடைக்கவில்லை. 

இவர்களின் ஆய்வுப்படி முஸ்லிம்களுடைய அடையாளங்களான தொப்பி, தாடி, பர்தா மட்டுமின்றி எந்த நகரத்தை கண்டாலும் வானுயர் மஸ்ஜித்கள், அதான் ஒலி, முஸ்லிம்களின் பெரிய வியாபார ஸ்தலங்கள் இவைகளுக்கெல்லாம் பாரிய பங்களிப்பு தப்லீக் ஜமாத் செய்து வருகிறது. எனவே இவர்களை சற்று உற்று நோக்க வேண்டும் என்ற எண்ணத்தடனேயே சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு ஜமாத்தார்களை வெளியேற்ற வேண்டும் என வேண்டிக் கொண்டனர். அதிலும் இவர்கள் வெற்றிபெறவில்லை. மேலும் தப்லீக் ஜமாத்தார்களை நேரடியாகத் தாக்க எவ்வித தடயங்களும் இல்லாத காரணத்தினால் பலவாறு சிந்திக்க ஆரம்பித்தனர். இதுவும் வெற்றியளிக்காது தோள்வி கண்டனர்.

அடுத்த கட்டமாக (யார் என்ன சொன்ன போதிலும்) ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களின் ஒரு பலம் நிறைந்த தலைமைத்துவம் என்றும் இதற்கு மக்கள் கட்டுப்படுகிறார்கள் மட்டுமின்றி பாரிய செல்வாக்கும் இருக்கிறது என்பதனையும் நன்கரிந்து இங்கிருந்து தான் தமது வேட்டையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். இந்த வரிசையில் தமக்குக் கிடைத்த துரும்பே அ.இ.ஜ.உ வின் ஹலால் பிரிவாகும். இதன் மூலம் கீழ்வரும் அம்சங்களை எதிர்பார்த்தனர்.

1. உலமாக்களுக்கும், பொது மக்களுக்குமிடையிலான உறவு தூரமாக வேண்டும்.

2. தமக்குள்ளேயே (உலமாக்கள்) முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட வேண்டும்.

3. குழுக் குழுக்களாக முஸ்லிம்கள் பிரிந்து ஐக்கியமற்ற சூழ்நிலை உருவாக வேண்டும்.

4. பொது மக்கள் வீதிகளில்; இறங்கி தமது உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.

  (அதன் போதும் தமது சில திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.

இந்தத் திட்டங்களில் எல்லாவற்றிலும் வெற்றி பெறாவிட்டாலும் ஒரு சிறிய வீதமேனும் முன்னேற்றம் கண்டனர். காரணம் முஸ்லிம்களின் பிரிவினைகளே என்றால் மிகையாகாது.

ஹலால் பிரச்சனைக்கான ஜம்இய்யத்துல் உலமாவின் நடவடிக்கைகள்:

உண்மையில் இந்தத் தாக்குதலை ஜம்இய்யா அணுவளவேனும் எதிர்பார்த்திருக்கவில்லை. எப்பொழுதும் போல இது பணியாய்க் கரைந்து விடும் என்றே எண்ணி இருந்தனர். ஆனால் இவர்களின் எதிர்ப்புப் பிரச்சாரங்கள்; நாளுக்கு நாள் அதிகரித்த போதே இதற்கான நடவடிக்கைகளில் ஜம்இய்யா இறங்க ஆரம்பித்தது. 

உத்தியோகபூர்வ சந்திப்புக்கள்:

1. ஜனாதிபதியின் சந்திப்பு.
2. பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவின் சந்திப்பு.
3. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்சவின் சந்திப்பு.
4. அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவைச் சந்தித்தல்.
5. மீண்டும் ஜனாதிபதியின் அமைப்பின் பேரிலான சந்திப்பு.
6. மீண்டும் அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்சவின் சந்திப்பு.
7. பொது பல சேனாவைச் சந்திக்க இரண்டு முறைகள் அதன் தலைமையகத்திற்குச் சென்றமை.
8. இவைகள் அல்லாமல் இன்னும் பல முக்கிய பதவிகளில் உள்ள பிரதிநிதிகளின் சுமார் 15 க்கும் மேற்ப்ட்ட சந்திப்புக்கள்.

ஊடகவியலாளர் மாநாடுகளும், கணக்கறிக்கை சமர்ப்பித்தலும்:

1. 07.02.2013 ஹோட்டல் ரன்முத்து – ஆட்சேபனைகளுக்கான பதில்கள்.
2. முஸ்லிம்களுக்கு மட்டும் ஹலால் என்ற அறிவிப்பு.
3. 2012 ம் ஆண்டின் மார்ச் மாதம் வரை முடிவுற்ற வருடாந்த வரவு செலவு கணக்கறிக்கைகளை ஊடகங்களுக்கும், பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொருளாதார அமைச்சுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது.
4. பணம் செலுத்தி பத்திரிகைகளில் ஹலால் என்றால் என்ன? என்ற தெளிவு வழங்க்ப்பட்டது.

இந்த சகல முயற்சிகளுக்குப் பின்பும் இந்த இனவாதக் குழு ஜம்இய்யத்துல் உலமாவை விட்டபாடு இல்லை. ஆனால் ஜனாதிபதி அவர்கள் இவ்விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு உதவுவதாகவும், முஸ்லிம்கள் தமக்குச் செய்த உதவியை தாம் ஒருபோதும் மறக்கப் போவதுமில்லை என்றார். அமைச்சர் பசில் அவர்கள் ஹலால் இந்நாட்டு பொருளாதாரத்திற்கு பெரிதும் பங்களிப்புச் செய்வதாகவும், இதனை இடைநிறுத்தும் எண்ணத்தை விட்டுவிடுமாறும் வேண்டிக் கொண்டார். பாதுகாப்புச் செயளாளர் கூறும் போது: இதனை முஸ்லிம்களுக்கு மாத்திரம் கொடுங்கள் என்று ஆலோசனை வழங்கினார். இதனை மையமாக வைத்தே மேற்படி அறிவுப்புக்காக ஒரு ஊடகவியலாளர் மாநாடும் நடத்தப்பட்டது.

அரசாங்கத்தின் நியாயமற்ற மௌன விரதம்:

இத்தனை சந்திப்புக்களுக்குப் பின்பும் அரசாங்கம் இதுபற்றி எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை. மறுபக்கத்தில் அப்பாவி சிங்கள மக்களினது உள்ளங்களில் இனவெறியும், கார்ப்புணர்ச்சியும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறது. எமக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டிய அரசாங்கம் பொது பல சேனாவுடன்  போய் கதைக்கச் சொல்கிறது. எந்தவொரு அங்கீகாரமும், அடிப்படையுமில்லாத இந்த இனவாதிகளுடன் ஜம்இய்யா பேசுவதற்கு என்ன இருக்கிறது. அரசாங்கத்தின் இப்படியான நடவடிக்கைகள் நம்பிக்கையின்மையையும், சந்தேகத்தையும் உண்டுபண்ணி இருக்கிறது. அரசாங்கத்தின் இந்த மௌன விரதத்தைக் களையவும், அதன் உண்மை நிலைப்பாட்டை  விளங்கிக் கொள்ளவுமே ஜம்இய்யத்துல் உலமாவின் முடிவு அமைந்திருக்கிறது.  

ஹலாலை அரசு பொறுப்பேற்றால்..?

ஹலாலை ஒருபோதும் அரசு பொறுப்பேற்கப் போவதில்லை. அது நடைமுறைச் சாத்தியமற்ற நிலைப்பாடுமாகும். அப்படி தாம் பொறுப்பேற்று செய்வதாக முன்வந்தால் ஜம்இய்யா ஒரு ஒப்பந்தம் அடிப்படையில் அதனைக் கையளிக்கும். அதாவது (பணம்) கணக்கு சம்பந்தப்பட்ட விவகாரங்களை அரசும், ஏணைய கண்காணிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விவகாரங்களை ஜம்இய்யாவும் இணைந்து செய்யும். தாமும் செய்யாமல், செய்வோருக்கும் உடந்தையாக இருக்காமல் மௌனம் காப்பதானது இனவாதிகளுக்கு பச்சைக் கொடி காட்டுவதாகும். இதனையே டீடீளு ன் நேற்றைய 'ஏiஉவழசல கழச டீயடயளுநயெ! றுந வாயமெ வாந பழஎநசnஅநவெ கழச ழெவ யஉஉநிவiபெ வாந யுஊதுரு ழககநச. றுந யடளழ வயமந வாளை யள பழஎநசnஅநவெள டிடநளளiபௌ ழn ழரச உயஅpயபைளெ' என்ற டுவீட்டர் செய்தி உணர்த்துகிது.

ஹலால் சான்றிதழ் பெற்ற கம்பனிகளின் நிலைப்படு?

இவைகளுக்கிடையில் சென்ற 27.02.2013 அன்று சிங்கள் பத்திரிகையான லக்பிமவுக்கு வேண்டோல் கம்பனி உரிமையாளர் லேலல் கொடகந்த அவர்கள் பேட்டியளிக்கையில்: நான் பொருட்கள் விற்க வேண்டும். எனக்கு ஜம்இய்யத்துல் உலமாவே ஹலால் சான்றிதழ் தர வேண்டும். மட்டுமின்றி ஹலால் உணவு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல எமது மதகுருமார்களுக்கும் அது ஏற்றமானது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

பின் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சென்ற 28.02.2013 அன்று முன்னாள் பிரதமர் ரட்னசிரி விக்ரமநாயக்க அவர்களின் தலைமையில் ஹலால் தொடர்பில் ஆராயும் அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொண்ட சிங்கள வர்த்தகர்கள் : ஹலால் தொடர்பில் மத குருமார்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தப் பிரச்சினையிட்டு நாம் வருந்துகிறோம். இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளினால் எமது வியாபாரம், ஏற்றுமதிகள் வீழ்ச்சி கண்டுவிட்டன. இதனால் இலங்கைப் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என்றும் கருத்து வெளியிட்டு இருந்தனர்.

உள்வீட்டு விரோதிகள்

ஹலால் பிரச்சனையைக் காரணம் காட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் ஊடகத்திற்கு வந்து எமது முஸ்லிம் எதிரிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். மாற்றுக் கருத்துக்களும், முரண்பாடுகளும் இல்லாத எந்தவொரு அமைப்போ அல்லது தனிநபரோ இல்லை. தாம் முரண்படும் விடயங்களை தமக்குள்ளேயே முறையான கருத்துப் பரிமாறல்களின் மூலம் உடன்பாடுகளுக்கு இருதரப்பினரும் வர வேண்டும். எமது முரண்பாடுகளை எமது விரோதிகளுக்கு மத்தியில் நாம் வெளிப்படுத்தும் பொழுது அவர்களின் ;சதி முயற்சிகளுக்கு நாம் உடந்தையாக இருப்பது போலாகிவிடும். இபொழுதும் எமது சில முஸ்லிம் சகோதரர்கள் ஹலால் தேவையில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், எப்படியோ ஏதாவது ஒரு முறையில் ஹலால் பிரச்சினைக்கு தீர்வு வந்துவிட்டால் பொது பல சேனாவின் அந்தப் பட்டியலில் இருக்கும் ஏனைய அவர்களின் சதித்திட்டங்களுக்கும் ஜம்இய்யத்துல் உலமா தான்  இவைக்களுக்கும் காரணம் என்கூறி ஜம்இய்யாவை பழிக்காடாக்க முயற்சிப்பார்களா?

நாம் என்ன செய்ய வேண்டும்?

வீணான விமர்சனங்களை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும். எமக்கு அறியாத விடயங்களைப் பேசுவதும், ஊகிப்பதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டிருக்கிறது. அது போலவே ஆதாரம் இல்லாமல் சந்தேகத்துடன் வரும் செய்திகளை நம்பவும் கூடாது. ஆகவே நாம் எமது செயற்பாடுகளை அல்லாஹ் சொல்லும் பிரகாரம் அமைத்துக் கொள்வதுடன், பள்ளிவாசல்களோடு அதிகமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுஈ; எமது நாட்டின் பயங்கரமான சூழ்நிலை மாறி முஸ்லிம்களுக்கு பூரண வெற்றி கிடைக்க வேண்டுமென அதிகமதிகம துஆக்களில் ஈடுபட வேண்டும். இறுதியாக கீழ்வரும் திருக்குர்ஆன் வசனத்தின் உண்மை நிலையையும் எமது மனதில் பதிய வைக்க வேண்டும். 

'அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான் ' (61:08)

4 comments:

  1. Late statement but better than never
    Dehiwala Naushad

    ReplyDelete
  2. மாஷா அழ்ழாஹ் . எமது சோதனை நிறைந்த இச்சூழலில்,தீர்வுகளுக்கான, ஜம் இய்யாவின் முன்னெடுப்புக்கள், காய் நகர்த்தலகள் பற்றி இவ்வறிக்கை மூலம் அறிய முடிகின்றது.ஜம் இய்யாவின் செயற்பாடுகள்,அதன் வளர்ச்சிகளை தூரத்தில் இருந்து கொண்டு, அவதானித்து ,அதன் உயர்வை இரசிப்பவன் என்ற வகையில் ,ஒரு விடயத்தைக்கூறவிரும்புகின்றேன்:அதாவது உலமா சபையை எம் சமூகம் முழுமயாக நேசிக்கின்றது, நம்புகின்ற்து.தமது ஆத்மீக லௌகீக விவகாரங்களில் சபை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகின்றது சுருங்கக்கூறின் அரசியல் வாதிகளை விட சமூகம் உலமாக்களை நம்புகிறது. எனவே சபை ,எக்காலத்திலும் எவருக்கும் அடிமைப்படக்கூடாது.எந்த அரசியல் வாதிக்கும் சோரம் போகக்கூடாது.நடு நிலை பேணவேண்டும்.உள் முறண்பாடுகளின்றி.இயக்கச்சார்பின்றிசெயற் படுவதுதான் காலத்தின் தேவையாகும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

    ReplyDelete
  3. alhamdulillah moulavi ivargalin ilakku ithuwallah allah pothumanawan

    ReplyDelete

Powered by Blogger.