சவூதி அரேபியாவில் 7 பேருக்கு மரண தண்டனை
ஐ.நா. மற்றும் மனித உரிமை அமைப்புகளின் அழுத்தத்திற்கு மத்தியில் சவூதி அரேபியாவில் 7 பேர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவூதியின் தெற்கு நகரான அபாவில் கொள்ளை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேற்படி ஏழு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் குறிப்பிட்டார். இதில் பாரம்பரிய முறையான தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்படாமை விசேட அம்சமாகும்.
கடந்த 2009 ஆம் ஆண்டில் நகைக்கடை ஒன்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காகவே இந்த 7 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் இந்த மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என ஐ.நா.வின் சுயாதீன நிபுணர் குழு கடந்த செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியா நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தது.
இந்த 7 பேர் மீதான குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டது என்றும் இவர்கள் மீது நியாயமான நீதி விசாரணை நடத்தப்படவில்லை என்றும் மேற்படி நிபுணர் குழு குற்றம்சாட்டியது. அதேபோன்று கொள்ளைக் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டோரில் இருவர் குறித்த காலப்பகுதியில் பாலிய வயதுடையவர்களாக இருந்ததாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம்சாட்டியது.
சவூதி அரேபியாவில் இந்த ஆண்டுக்குள் மாத்திரம் சுமார் 22 பேர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. tn

இவர்கள் ஆயுத முனையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மற்றும் இது ஒரு கொள்ளை சம்பவம் அல்ல மறாக பல கொள்ளைகளை கூட்டாக செய்துள்ளார்கள் மற்றும் இவர்கள் அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணியமான அரபா நாளில் மக்கள் அரபா மைதானத்தில் தங்கி இருக்கும் போது மது போதையில் இக்குற்றங்களில் ஈடுபட்டார்கள்
ReplyDeleteஇவர்கள் பால்ய வயதுடையவர்கள் என்பது ஐக்கிய நாட்டின் யுனேஸ்கே சட்டப்படி ஆனால் சவ்தியில் மற்றும் அல்ல இஸ்லாத்திலும் ஒருவர் பருவ வயதை அடைந்து விட்டால் அவர் செய்யும் குற்றங்களுக்கு அவரே பொருப்பு