Header Ads



இஹ்வானுல் முஸ்லிம்களுக்கு அமெரிக்கா உதவுகிறதா..?


(Tn) எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் மொஹமட் பாஹ்தியை இடைமறித்து இளைஞர் ஒருவர் திட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மொஹமட் பாஹ்தி தலைநகர் கெய்ரோவில் இருக்கும் உணவு விடுதி ஒன்றுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றபோது அங்கிருந்த கரிம் பார்கில் என்ற இளைஞன் அவரை இடைமறித்து, “அமெரிக்கா உங்களை ஆட்சியில் நீடிக்க உதவுவதாலா அமெரிக்க உணவு விடுதிக்கு சாப்பிட வந்தீர்கள்” என கேட்டுள்ளார். அத்துடன், “உங்களது முடிவு எங்களது கையிலேயே இருக்கிறது. உங்களது காலம் கொஞ்சம்தான். 

நீங்கள் (சகோதரத்துவ அமைப்பு) மீண்டும் சிறைக்கு செல்வீர்கள்” என பாஹ்தியிடம் கூறியுள்ளார். ஆனால் இதற்கு பொறுமையாக பதிலளித்துள்ள பாஹ்தி, “உங்களைப் போன்ற மனிதருக்கு பதிலளிக்க வேண்டாம் என்று இறைவன் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நழுவியுள்ளார். 

இவ்வாறான தாக்குதல் ஒன்றுக்கு தலைவர் முகம் கொடுத்தது இது முதல்முறை என முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பேச்சாளர் அஹமட் ஆரிப் குறிப்பிட்டுள்ளார். எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினரே ஆட்சியிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. yes its possible asking questions...

    ReplyDelete
  2. உமர்( ரழி)யை மிம்பரில் வைத்து கேள்வி கேட்டு விட்டவர்களுக்கு........... உமர் (ரழி)யை தொழுகையில் வைத்து கொன்றுவிட்டவர்களுக்கு.......... உஸ்மான்(ரழி)யை குர்ஆனை ஓதிக்கொன்டிருக்கும் போது கொன்றவர்களுக்கு.... அலி(ரழி) ஹஸன் (ரழி) போன்றோரை கொன்று திண்றவர்களுக்கு...... மொஹமட் பாஹ்தியிடம் கேள்வி கேட்பது என்ன பாவமாகவா தெரியப் போகிறது? அதுவும் செய்தது முஸ்லீம்கள் என்பவர்கள்தான் இப்படி கேட்பவர்களும் முஸ்லீம்கள் என்பவர்கள்தான்.

    ReplyDelete

Powered by Blogger.