நாவலடியில் 13 வயது சிறுமி தற்கொலை
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி பகுதியில் து_க்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸ் பொறுப்பதிகாரி லால் உடுகம தெரிவித்தார்.
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு 1 மணியளவில் கோயிலுக்கு செல்ல வேண்டும் என வீட்டார்களிடம் கூறிவிட்டு தனது தூங்கும் அறைக்குள் தூங்கச்சென்று பின்னர் ஒரு மணியளவில் அறைக்குள் சென்று தந்தை பார்த்போது தூக்கில் தொங்கிய நிலையில் மகள் காட்சியளித்ததாக தந்தை பத்மறாசா கூறினார்.
இறால் குழி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவியான பத்மறாசா ஹம்சி (13) என தெரியவருகின்றது. தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இச்சிறுமியின் தாய் சவூதி அரேபியாவுக்கு சென்று 06 மாதங்கள் வீட்டொன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றி 2013 ஐனவரி 21 ம் திகதி தனது வீட்டு எஐமானி தள்ளி விட்டதினால் இடுப்பு உடைந்த நிலையில் ஒரு மாதம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் பின்னர் இவரை தூதரகம் ஊடாக இலங்கைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரியவருகின்றது.
இலங்கை வந்து மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவேளை தனது தாயின் கடமையை இச்சிறுமியே செய்து வந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சிறுமியின் தற்கொலைக்கு யார் காரணம் எனவும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment