முஹம்மது நபியை இழிவாக பேசிய விவகாரம் - வீடுகளுக்கு தீவைத்த 150 பேர் கைது
பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களின் வீடுகள் தாக்கப்பட்டது மற்றும் தீவைக்கப்பட்டது தொடர்பாக 150 பேர் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வாகூரில் உள்ள ஜோசப் காலனியைச் சேர்ந்த சவான் மசிக் என்ற கிறிஸ்தவர், முகமது நபியை இழிவாக பேசியதாக கூறி, வெள்ளிக்கிழமை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஜோசப் காலனிக்குள் புகுந்து, சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு தீவைத்தனர்.
இதையடுத்து, அங்கு பல காலமாக வசித்து வந்த கிறிஸ்தவர்கள், இரண்டு நாள்களாக திறந்த வெளியில் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு தீவைத்தவர்களை தேடிவருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்த அடையாளங்களை வைத்து, இதுவரை 150 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட பலர், முகத்தை மறைத்து துணியை கட்டியிருந்ததால், அவர்களை அடையாளம் காண்பது சிரமமாக இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். எனினும், கலவரத்தில் பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்படுவர் என்று அவர்கள் கூறினர்.

சம்பந்தப்பட்டவரை கைது செய்து தண்டிப்பதை விட்டு விட்டு அப்பாவி மக்களை துன்புறுத்துவது என்ன நியாயம்...? இஸ்லாம் இதனை ஒரு போதும் அனுமதிக்கவில்லை.
ReplyDelete