பாம்பு என்றால் அமெரிக்காவுக்கும் நடுக்கமா..?
பசிபிக் கடலில் குவாங் என்ற தீவு உள்ளது. இது அமெரிக்காவுக்கு சொந்தமானது. இங்கு அபூர்வ பறவைகள் பல உள்ளன. இங்கு வசிக்கும் பறவைகள் அழியும் நிலையில் இருக்கின்றன. இதற்கு இந்த தீவில் உள்ள பாம்புகள் தான் காரணம்.
இந்த தீவில் மட்டும் மரப்பொந்துகளில் வாழக்கூடிய 20 லட்சம் பாம்புகள் உள்ளன. பழும்பு நிறம் கொண்ட இந்த பாம்புகள் 8 அடி நீளம் கொண்டவை. இவைகளின் முக்கிய உணவாக பறவைகள் உள்ளன. பாம்புகள் அதிக அளவில் பெருகி இருப்பதால் அவை பறவைகளை பிடித்து சாப்பிடுகின்றன. இதன் மூலம் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.
எனவே பாம்புகளை கொல்ல அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக எலிகளில் விஷத்தை செலுத்தி அதை விமானத்தில் இருந்து தீவுகளில் வீச முடிவு செய்துள்ளனர். இந்த எலிகளை தின்னும் பாம்புகள் 72 மணி நேரத்தில் உயிரிழந்துவிடும்.

We know you are Expert in Killing.
ReplyDelete