பௌத்த குருவுக்கு இடையூறு விளைவித்த இளைஞர்கள் குழு பொலிஸாரிடம் சரண்
(இ. அம்மார்)
இன்று 10-03-2013 சுமார் 11. மணி அளவில் கண்டியிலிருந்து குருநாகல் எத்கந்த விஹாராதிபதி சென்ற வேன் ஒன்றுக்கும் குருநாகலையை நோக்கி மற்றுமொரு வேனில் சென்ற இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட வீதி ஒழுங்குப் பிரச்சினை காரணமாக எத்கந்த விஹாராதிபதியை இடையூறு ஏற்பத்தியமையினால் வேனில் பணயம் செய்த இளைஞர்கள் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வேனில் விஜயம் செய்த இளைஞர் குழுவினர் விஹாராதிபதியைப் பார்த்து இடையூறு விளைவித்த வண்ணம் சென்றுள்ளனர். எத்கந்த விஹாராதிபதி கலகெதர மாவத்தகம பொலிஸாருக்கு தொலைபேசியூடாக தெரியப்படுத்திய போதும் அந்த இளைஞர் குழுவினர் பொலிஸாருக்கு கட்டுப்படாமல் குருநாகலை நோக்கிச் சென்றுள்ளனர் எத்கந்த விஹாராதிபதி விஹாரைக்கு தெரியப்படுத்திய போது அங்கிருந்த பொது மக்கள் வீதியை மறித்து அவ்வேனை மடக்கிப் பித்த போதும் அதிலிருந்து மீண்டு கொண்டு குருநாகல் பொலிஸார் நிலையம் சென்று சரண் அடைந்துள்ளனர்.
இவ்வேனில் சென்ற இளைஞர்கள் யாவரும் சிங்கள இளைஞர்கள் எனவும் இவர்கள் உயர் தர குடுமு;பத்தைக் சேர்ந்தவர்கள் எனவும் குருநாகலில் நடைபெறும் பாடசாலைகளுக்கிடையே நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை கண்ட களிப்பதற்காக வருகை தந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த விஹாரை முன்னால்தான் ஹலாலுக்கு எதிரான பாரியளவிலான பதாதை இரண்டு போடப்பட்டுள்ளது

Al Hamdulillah this is beginning
ReplyDeleteநல்ல காலம் பிடிபட்டது. இல்லையேல் அதுவும் எம்மவராக்கப்பட்டிருப்பர்.
ReplyDeleteallah return kudukuran..naaga pathutu eeka than eekudhu
ReplyDelete