ஈமானில் உறுதி வேண்டும் - கட்டாரில் இஸ்லாமிய மாநாடு
கட்டாரிலுள்ள ஸ்ரீ லங்கா தஃவா நிலையம் ஏற்பாடு செய்து நடாத்தும் விஷேட இஸ்லாமிய மாநாடு 01-03-2013 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகை முதல் அல்பனார் கேற்போர்கூடத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
பேரின வாதத்தால் சுற்றி வளைக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் பற்றி அஷ்ஷெய்க்.இத்ரீஸ் ஹசன் சஹ்வி உரை நிகழ்த்துவார்கள்.
இம்மாநாட்டின் பிரதம வளவாளராக சவூதி அரேபிய இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் அழைப்பாளர் அஷ்ஷேய்க் அஸ்ஹர் சீலானி "ஈமானில் உறுதி வேண்டும்" எனும் தலைப்பில் பிரதான உரை நிகழ்த்த இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பெண்களுக்கு பிரத்தியேகமான இட வசதி மற்றும் இரவூ உணவூம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றமை விஷேட அம்சமாகும்.
கட்டார் வாழ் அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் இவ்விஷேட இஸ்லாமிய மாநாட்டில் கலந்து பயன்பெறுமாறு அழைக்கப்படுகின்றீர்கள்

Post a Comment