ஒபாமாவுக்கு இஸ்ரேல் நாட்டின் உயரிய விருது
அமெரிக்க அதிபர் ஒபாமா அடுத்த (மார்ச்) மாதம் இஸ்ரேல் நாட்டிற்கு வர உள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், முதன்முறையாக இஸ்ரேல் வரும் ஒபாமாவுக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'அதிபர் விருது' வழங்கப்படவுள்ளது என இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பேரெஸ் அலுவலகம் நேற்று அறிவித்துள்ளது.
இஸ்ரேலை பலப்படுத்தவும் அந்நாட்டு மக்களை பாதுகாக்கவும் ஒபாமா வழங்கி வரும் பங்களிப்பை கருத்தில் கொண்டும், நட்புறவை பாராட்டியும் அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளதாக இஸ்ரேல் அதிபரின் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது.
ஒபாமாவுக்கு வழங்கப்படவுள்ள இந்த விருது, பிரான்ஸ் நாட்டின் 'லெஜியன் ஆஃப் ஹானர்', கனடாவின் 'ஆர்டர் ஆஃப் கனடா' போன்ற அதி உயரிய விருதுக்கு ஒப்பானதாகும்.

Post a Comment