Header Ads



சவூதி அரேபிய இளவரசியின் படங்கள் இணையதளங்களில்...!


சவூதி அரேபியாவின் இளவரசி பஸ்மா பின்த் சவுத் பின் அப்துல்லா ஷிஷ் இல் சவுத் மேற்கத்தேய உடையுடன் புகைப் பிடிப்பது போன்ற புகைப்படம் யூடியுப் இணையதளத்தில் வெளியானது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவூதி மன்னர் பரம்பரையை தோற்றுவித்த காலஞ்சென்ற மன்னர் சவூத்தின் இளைய மகளான 48 வயதான பஸ்மா பின்த் சவுத் தற்போது லண்டனில் வாழ்ந்து வருகிறார். 

இவர் 5 குழந்தைகளின் தாயாவார். இந்த நிலையில் அவரது அதிர்ச்சி தரும் புகைப்படம் ஒன்று யூடியூப் இணையதளத்தில் வெளியானது. அதில் அவர் மேற்கத்தேய உடையில் இருந்தபடி சிகரெட் பிடிப்பது போல் உள்ளது. 

இதை அவர் தனது தோழியின் மடிகணனியில் பதிவு செய்து வைத்திருந்தார். அதை கணனியில் புகுந்து தகவல்களை திருடும் ஒரு நபர் பெற்றுவிட்டார்.

சவூதி கலாசாரத்திற்கு முரணான இதை இணையதளங்களில் வெளியிடாமல் இருக்க அந்த நபர் 300,000 பவுண்ட் கேட்டு மிரட்டி வந்துள்ளார். 

இந்த நிலையில் திடீரென அந்த புகைப்படத்தை அந்த நபர் வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.