பாலைவனத்தை சோலைவனமாக்கும் முயற்சி
பாலைவனத்தை சோலைவனமாக்கும் முயற்சியாக இந்த ஆண்டில் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என துர்க்மினிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அரசாணையில் அந்நாட்டு அதிபர் குர்பங்குலி பெர்டிமுகமெதொவ் சனிக்கிழமை கையெழுத்திட்டார். ""பாலைவனமாக உள்ள நாட்டை தோட்டம் நிறைந்த பகுதியாக மாற்றுவதற்காகவும், இயற்கை அழகைக் கூட்டுவதற்காகவும் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்படுகிறது.
தலைநகர் அஷ்கபத்தில் மட்டும் 15 லட்சம் மரக்கன்றுகளும், நாட்டின் பிற பகுதிகளில் 15 லட்சம் மரக்கன்றுகளும் நடப்படும். உள்ளாட்சித் துறையினர் இந்த மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுதல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வர்'' என அதில் கூறப்பட்டுள்ளது

Post a Comment