Header Ads



''காஷ்மீர் பிரச்னைக்கு உத்வேகத்துடன் கூடிய ஆயுதப் போராட்டமே ஒரே தீர்வு''



ஜம்மு காஷ்மீரில் முஸ்லிம் போராளி அமைப்புக்களுக்கு புத்துயிரூட்ட, காந்தஹார் விமானக் கடத்தலின்போது விடுதலை செய்யப்பட்ட பயங்கரவாதி முஷ்டாக் அஹமது ஜர்கார் முடிவு செய்துள்ளார்.

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 1999ஆம் ஆண்டு கடத்தப்பட்டபோது, பயணிகளை மீட்பதற்காக மூன்று முஸ்லிம் போராளிகளை இந்திய மத்திய அரசு விடுதலை செய்தது. அவர்களில் ஒருவரான முஷ்டாக் அஹமது ஜர்கார் இப்போது பாகிஸ்தான் காஷ்மீரின் தலைநகரான முசாபராபாதில் வசித்து வருகிறார். அங்கு, அல் உமர் முஜாஹிதீன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அப்சல் குருவை இந்தியா சமீபத்தில் தூக்கிலிட்டதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் முஸ்லிம் போராளி அமைப்புக்களுக்கு புத்துயிரூட்ட முடிவு செய்துள்ளார்.

அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டிகளில்,,

""காஷ்மீர் பிரச்னைக்கு ஜம்மு காஷ்மீரில் மீண்டும் உத்வேகத்துடன் கூடிய ஆயுதப் போராட்டமே ஒரே தீர்வு. ஆயுதப் போராட்டம் மூலம் காஷ்மீருக்கு விடுதலை அளிப்பதே என் நோக்கம். பணம், துப்பாக்கி, ஆட்கள் போன்றவற்றை நாம் எங்கிருந்தும் பெறலாம். எல்லையின் இரு புறங்களிலும் நாம் பயற்சி மையங்களை நடத்தி வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளார். இத்தகவலை பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் தி நியூஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.