புத்தளம் மாவட்ட புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக கித்ஸிரி கனேகம நியமனம்
(அபூ நாதில்)
புத்தளம் மாவட்டத்திற்கான புதிய பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளிவ்.ஏ.டீ.பீ. கித்ஸிரி கனேகம தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இன்று காலை இந்த நிகழ்வு இடம் பெற்றது.
புத்தளம் மாவட்டத்திற்கான புதிய பிரதி பொலிஸ் மா அதிபரை வரவேற்கும் நிகழ்வு புத்தளம் பொலிஸ் நிலையம் முன்பாக இடம் பெற்றது.
புத்தளம் பொலிஸ் தொகுதி பொலிஸ் அத்தியட்சகர் அனுர அபேவிக்ரம, புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.கே. சுமனசேன உட்பட ஏனைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Post a Comment