Header Ads



பொத்துவில் பட்டதாரிகள் நியமனம் செய்யப்படுவார்களா..?


கிழக்கு மாகணப்பாடசாலைகளின் காணப்படுகின்ற ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு 2013-02-16 ம் திகதி போட்டிப்பரீட்சை நடைபெற்றது.

பொத்துவில் பிரதேசத்தில் உள்ள 17பாடசாலைகளுக்கு 342 ஆசிரியர்கள் தேவையாக உள்ளபோது தற்போது பிரதேசத்தை சேர்ந்த 185 ஆசிரியர்களும்,வெளிப்பிரதேசத்தை சேர்ந்த67 ஆசிரியர்களும் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவதோடு பல வருடங்களாக காணப்பட்டுவரும் 90 வெற்றிடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதால் பெரும்பாலான பொத்துவில் பாடசாலைகள் கல்வி நடவடிக்கையில் பின்தங்கிய நிலையில் உள்ளன. அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளிள் பொத்துவில் பிரதேசத்தில் மாத்திரமே அதிகமான வெளிப்பிரதேசத்தை சார்ந்த ஆசிரியர்கள் கடமை புரிகின்றனர்.

குறித்த பிரதேசம் அக்கரைப்பற்றில் இருந்து 60 கி.மீ தொலைவில் இருப்பதால் ஆசிரியர்களின்  அதிக விடுமுறை,நேரம் கடந்க வருகை மந்த கதியிலான கல்விச்செயற்பாடு, மாணவிக

ளுடனான ஒழுக்கமற்ற நடத்தை போன்ற காரணங்களால் பொத்துவில் மாணவச்சமூகம் பாரிய மன,கல்விசார் பின்னடைவிற்கு தல்லப்படுவதோடு, காணப்படும் 90 ஆசிரிய வெற்றிடங்களுக்கு பிரதேசத்தை சார்ந்த பட்டதாரிகளின் நியமணத்தின் கட்டாயத் தேவையினை உணர்த்துகின்றது.

 குறிப்பிட்ட ஆசிரியர் நியமனத்துக்கான போட்டிப்பரீட்சையை பொத்துவில் பிரதேசத்தில் இருந்த எழுதிய 70 பட்டதாரிகளும் பொத்துவில் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரிய வெற்றிடங்களுக்கு நியமனம் செய்யப்படுவார்களா,அவர்களின் நியனத்திற்கு பொத்துவில் கல்வி உயர் அதிகாரிகள், ,அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பார், பொத்துவில் அரசியல்வாதிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என நாம் எதிர்பார்கின்றோம்.

No comments

Powered by Blogger.