கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி ஏற்பாட்டில் சுற்றுலா துறை கற்கைநெறி
(ஹாதி)
கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரால் லால் பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்குடன் இராணுவ அதிரடிப்படை 03 படைப்பிரிவு கல்வியமைச்சின் (ESKAP) திட்டத்துடன் இணைந்து நடாத்தும் உயர் கல்வியை தொடர முடியாத, தொழில் வாய்ப்பினை தேடும் இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டலுக்கான முற்றிலும் இலவசமான சுற்றுலா துறை கற்கைநெறி 2013.02.18ம் திகதி திங்கட்கிழமை அம்பாறை சேவாலங்கா பயிற்சி நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் கலந்து கொண்ட விரிவுரையாளரும் கேஸ்ப் கற்றலின் பிரதம நிறைவேற்றதிகாரியுமான ரொஷான் டெலிம உரையாற்றுவதனையும், கலந்து கொண்ட மாணவர்களையும், இராணுவ அதிரடிப்படை படைப்பிரிவு 3இன்; அம்பரை மாவட்ட சிவில் நிருவாக அதிகாரி கேர்னல் தென்னக்கோன், மேஜர் நவரட்ண, மற்றும் விரிவுரையாளர்கள் அமர்ந்திருப்பதனையும் படங்களில் காணலாம்

Post a Comment